Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கத்தார் ஸனாஇய்யாவில் ‘வாழ்வும் வழிபாடும்’ என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு இன்று இரவு

    – கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) டோஹா: கத்தார் ஸனாஇய்யாவில் ‘வாழ்வும் வழிபாடும்’ என்ற தலைப்பில் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஈமானிய அமர்வு பனார் இஸ்லாமிய கலாச்சார் நிலையம் ஸனாஇய்யா கிளையில் இடம்பெறும் இதனை அஷ்ஷெய்க் அலாவுத்தீன் (ஸலபி )நிகழ்த்துவார்.

  • காத்தான்குடி கலைஞர்களின் ‘கேள்விக்குறி’ நாடகம் நேத்ரா TV யின் யாத்திரை நிகழ்ச்சியில் இன்று

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கலைஞர்களின் ‘கேள்விக்குறி ‘ நாடகம் 25-08-2014 இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நேத்ரா TV யின் யாத்திரை நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

  • டப்கா ராணுவ விமானத் தளத்தை கைப்பற்றியது இஸிஸ்!

    – AF-90 டமஸ்கஸ்: சிரியாவில் டப்கா ராணுவ விமான தளத்தை இஸிஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளாது. சிரியா மற்றும் ஈராக்கில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள இஸிஸ், அவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

  • இஸிஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணைகிறது மத்திய கிழக்கு நாடுகள்

    றியாத்: இஸிஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. தமது பதில் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக எகிப்து, ஜோர்தான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.

  • இஸ்ரேலுக்கு உளவு பாரத்த 2 பெண்கள் உள்பட 18 பலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றது ஹமாஸ்!

    – SHM காஸா: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 18 பேரை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளது ஹமாஸ் இயக்கம். ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்து நிற்கும் காஸா மக்கள், இந்த சம்பவத்தால் மேலும் பீதியாகியுள்ளனர். 18 பேரையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் நடுரோட்டில் நிற்க வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.

  • அல்-மனார் நிறுவனம் றமழானில் நடாத்திய 2014 – றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: றமழான் மாதத்தில் ஒவ்வொருவரும் குர்ஆனோடும், நபி வழியோடும் தொடர்புகளை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக காத்தான்குடி அல்-மனார் நிறுவனம் றமழானில் நடாத்திய 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அல் மனார் அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • கருமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் நிலைப்பாடு என்ன? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கருமலையூற்று: இலங்கையில் முஸ்லிம்களின் மத உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி அவற்றை மறுக்கும் மன நிலையை உருவாக்குவதில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தொடராக செயற்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் அன்மைக்காலமாக எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு மதரீதியான பிரச்சினைகளின் பிண்ணனியில் பௌத்த தீவிரவாதிகள் செயற்பட்டு வருவது நாடறிந்த உண்மையாகும். இவர்களுக்கு பக்க பலமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாகவும் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டார்  இக்குற்றச் சாட்டை பாதுகாப்பு செயலாளர் மறுத்தும் வருகிறார்.

  • 23 இலட்சம் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ள காத்தான்குடி – 02 இமாம் அபூ ஹனிபா வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி  நகர சபை எல்லைக்குள் மக்கள் பாவனைக்குதவாத வீதிகளை புனரமைக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.

  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது – காத்தான்குடியில் றவூப் ஹக்கீம்

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் இடையே தொடர்புள்ளதாக தெரிவிப்பதானது சுத்த மடமையிலும் ஒரு மடமைத்தனமான ஒரு கூற்றாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு தொடர்பான கூட்டத்தின்போது தெரிவித்தார்.

  • ‘இரு வாரங்களுள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்’- முதல்வர் மஜீதிடம் படைத்தரப்பு உறுதி

    திருகோணமலை: கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தைப் பூதாகரப்படுத்தி அரசியல் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ. மஜீத் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

  • வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 2205 குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீர் தாங்கிகளின் (பவுசரின்) ஊடாக விநியோகிக்கப்படும் நீரை மக்கள் சிரமம் இல்லாமல் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நீர் சேகரிக்கும் கொள் கலன்கள்     23-08-2014 இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

  • கடந்த 24 மணி நேரத்துக்குள் 100 ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் வீழ்ந்தன! சிறுவன் பலி, 10 பேர் காயம்!!

    – MJ டெல் அவிவ்: கடந்த 24 மணிநேரத்திற்குள் காஸாவிலிருந்து ஏவப்பட்ட சுமார் நூறுக்கும் அதிகமான ரொக்கட்டுகள் இஸ்ரேல் நகரங்களில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக 4வயதுச் சிறுவன் கொல்லப்பட்டும், பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.

←Previous Page
1 … 678 679 680 681 682 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar