டெல் அவிவ்: கடந்த 24 மணிநேரத்திற்குள் காஸாவிலிருந்து ஏவப்பட்ட சுமார் நூறுக்கும் அதிகமான ரொக்கட்டுகள் இஸ்ரேல் நகரங்களில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக 4வயதுச் சிறுவன் கொல்லப்பட்டும், பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து காஸாவிலிருந்து தொடர்ந்து ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் வந்து வீழ்கின்றன. டானியல் ட்ரிகர்மேன் எனும் 4 வயதுச் சிறுவன் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இதற்கான பதிலடி காத்திருக்கின்றது என இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹூ சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட 60க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களில் 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன் அறிவித்துள்ளது.
Published by

Leave a comment