இஸ்ரேலுக்கு உளவு பாரத்த 2 பெண்கள் உள்பட 18 பலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றது ஹமாஸ்!

Hamas6[1]– SHM

காஸா: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 18 பேரை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளது ஹமாஸ் இயக்கம். ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலால் சிதிலமடைந்து நிற்கும் காஸா மக்கள், இந்த சம்பவத்தால் மேலும் பீதியாகியுள்ளனர். 18 பேரையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் நடுரோட்டில் நிற்க வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 18 பேரில் 2 பேர் பெண்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது. இவர்களில் 7 பேரை காஸா சிட்டி பள்ளிவாயலுக்கு அருகே வரிசையாக சுவர் ஓரமாக நிற்க வைத்து கைகளையும், கண்களையும் கட்டி விட்டுச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மற்ற 11 பேரும் காஸா நகர தலைமை பொலீஸ் அலுவலத்தில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாகவும்இ பாலஸ்தீனத்திற்கும்இ ஹமாஸுக்கும்இ காஸாவுக்கும் துரோகம் செய்யும் எவரையும் விட மாட்டோம். மற்றவர்களுக்கும் இதே தண்டனை விரைவில் கிடைக்கும். இப்போதைய சூழ்நிலைதான் எங்களை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது என்று கூறயுள்ளார் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த அலி ரை.

இந்த சம்பவத்திற்கு முதல் நாள்தான் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான மூன்று தலைவர்களை இஸ்ரேல் படையினர் சரமாரியான ஏவுகணைத் தாக்குதலில் கொன்றனர். இதற்கு இந்த 18 பேரும்தான் உளவு சொன்னதாக புகார்கள் வந்தன. இதையடுத்தே இந்த 18 பேரையும் கொன்று குவித்துள்ளனர் ஹமாஸ் இயக்கத்தினர்.

இஸ்ரேல் இவ்வளவு கொடூரமாக தாக்கிய போதிலும் கூட இஸ்ரேலுக்கு உளவு சொல்வோரும் பாலஸ்தீனத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து தகவல்களைப் பெறும் பணியை இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியான ஷின் பெட் செய்கிறதாம்.

Published by

Leave a comment