காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மக்கள் பாவனைக்குதவாத வீதிகளை புனரமைக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக இந்த வீதி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்ப்படுவதாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
இதற்கமைய இவ் வருடம் காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மக்கள் பாவனைக்குதவாத 83 வீதிகளை கொங்ரிட் வதிகளாக புனரமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பரிந்துரைக்கமைய சுமார் 186 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதாக நகர சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி -2 இமாம் அபூ ஹனிபா வீதி சுமார் 23 இலட்சம் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
குறித்த வீதி புனரமைப்பு பணிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் இன்று 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ் ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களான பி.ரீ.எம். பாரூக், என்.எம்.ஏ.கரீம், டி.எல்.எம். குறைஷ் , பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ. நாஸர் உட்பட பிரமுகர்கள் பலர் பிரசன்னமாயிருந்தனர்.
Published by



Leave a comment