ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது – காத்தான்குடியில் றவூப் ஹக்கீம்

unnamed2எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் இடையே தொடர்புள்ளதாக தெரிவிப்பதானது சுத்த மடமையிலும் ஒரு மடமைத்தனமான ஒரு கூற்றாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு தொடர்பான கூட்டத்தின்போது தெரிவித்தார்.

உற்பத்தி திறண் ஊக்குவிப்பு அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ எல் எம் என் முபீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எவ்வாறு தழிழ்த் தேசியக்கூட்டமைப்பு உள்ளதோ அதேபோல் முஸ்லிம்களுக்கு கட்சித் தேவை பலராலும் உணரப்பட்டுள்ளது. தமிழ்த்தலைமைகள் ஒன்று பட்டு கூட்டமைப்பை உருவாக்கி சர்வதேச மயப்படுத்தி பிரச்சினைகளை கொண்டு செல்கின்றார்களோ அவ்வாறு ஒன்றுபட்டிருந்த எமது கட்சியை பல கட்சிகளாக பிரித்து இன்று அது வௌவேறாக சிதறிப்போய்க்காணப்படுகிறது. இவற்றை ஒன்றுபடுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்ட சக்தியாக மாறவேண்டிய தேவை காணப்படுகிறது. இவ்வாறு ஒன்றுபடுவதன் ஊடாகவே இழந்த எமது பேரம்பேசும் சக்தியை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். இதனை உடனே செய்துவிட முடியாது. இதற்கு காலங்கள் செல்லலாம்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தற்போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைத்து பேசுகின்றார் என்றால், ஏன் நாம் அவ்வாறான சக்தியாக மாறமுடியாது. கட்சியை காட்டிக்கொடுக்கின்ற சுயலாபத்திற்காக ஒதுங்கிக்கொள்பவர்களுக்கு இங்கு இடம்தரமுடியாது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். கட்சியை பாதுகாத்து தன்னையும் பாதுகாத்து இஹ்லாசாக இணைந்து கொள்பவர்களுக்கே இங்கே இடமுண்டு. அத்துடன் பிரதேசவாதம் இன்று தலை தூக்கியுள்ளது .

ஊருக்கு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ மாகாணசபை உறுப்பினராகவோ வேண்டும் என்கின்றனர் அவ்வாறான நிலைப்பாட்டிலிருந்த மாறவேண்டும். நாடுபூராக ஒட்டுமொத்த சக்தியாக முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை காட்டவேண்டும். இதுதான் இப்போதுள்ள தேவையாகும். தற்போதுள்ள நிலைப்பாட்டில் பாதுகாப்பினை அரசாங்கம்தான் தரவேண்டும். அரசாங்கத்திடம் மாத்திரமே இதனைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஒரு பிரச்சினை வரும்போது அமைச்சர் அதாவுள்ளா அல்லது ஹிஸ்புள்ளா கதைக்காவிட்டால் பரவாயில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கதைக்கவேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அபிவிருத்தியையும் செய்து உரிமை பற்றியும் பேச வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அவற்றைத்தான் செய்து வருகின்றோம். இவ்வறான நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்குள் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பாதுகாப்பு செயலகத்தில் றுகான் குணரட்ண தெரிவித்துள்ளார். இவர் அல்கைதாவையும் ஆராய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான அறிக்கைகள் விடுவது சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே மேலும் விரசலை உண்டுபண்ணும். 2040 இல் சிங்களவர்கள் சிறுபாண்மையாவார்களாம் என்று ஒரு பல்கலைக்கழக நண்பர் என்னிடம் தெரிவித்தார். ஏன் இவ்வாறான நச்சுக்கருத்துக்களை உண்டுபண்டுகின்றனர். இவ்வாறான நிலைமைகளை மாற்றுவதற்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் இதற்கான குழுக்கள் அமைத்துள்ளோம் என தனதுரையில் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்தவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன், முன்னாள் நகர சபை தலைவர் மர்சூக் அகமட் லெவ்வை, நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா ஆகியோரின் சேவையினை தலைவர் பாராட்டி பேசியதுடன் ‘லட்சியப்போராளி முபீன்’ எனவும் பட்டம் சூட்டினார்.

மேற்படி நிகழ்வுக்கு உற்பத்தி திறண் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மஜீத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. எம் மன்சூர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவம் அன்வர் லாஹீர், அட்டாளைச்சேனை தவிசாளர் அன்ஸில், நிந்தவூர் தவிசாளர் அஸ்ரிப் மற்றம் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment