வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 2205 குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு

unnamedlபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீர் தாங்கிகளின் (பவுசரின்) ஊடாக விநியோகிக்கப்படும் நீரை மக்கள் சிரமம் இல்லாமல் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நீர் சேகரிக்கும் கொள் கலன்கள்     23-08-2014 இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10000ம் குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் வழங்கும் திட்டத்தில் இன்று மட்டு –மாவட்டத்தில் 2205 குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் ஒரு குடும்பத்திற்கு இரண்டு வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி கொள் கலன்களை பொது மக்களுக்கு வழங்கி வைத்தார்.

2205 குடும்பங்களுக்கு நீர் சேகரிக்கும் கொள் கலன்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் புனானை பஞ்ச மகா விகாரை, மயிலந்தன்னை சனசமூக நிலையம், ஜயந்தியாய பல்தேவைக் கட்டிடம், ரிதிதென்ன விவசாய அமைப்புக்களின் காரியாலயம் உட்பட 4 இடங்களில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தினுடைய மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.குரைக்குமரன், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ,வாழ்வின் எழுச்சி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர்; ஜே.மனோகிதராஜ் உட்பட வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment