டமஸ்கஸ்: சிரியாவில் டப்கா ராணுவ விமான தளத்தை இஸிஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளாது. சிரியா மற்றும் ஈராக்கில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள இஸிஸ், அவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில் இஸிஸ் வசம் இருக்கும் ரக்கா நகரை ஒட்டிய டப்கா ராணுவ விமான தளத்தை கைப்பற்ற கடந்த ஒருவார காலமாக போர் நடைபெற்றது
கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து சிரியாவின் அரசாங்கப் படையினருக்கும், இஸிஸ் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் அரசுப்படையை சேர்ந்த 346 பேரும், இஸிஸ் இயக்கத்தினர் 170 பேரும் பலியாகினர்.
தற்போது டப்கா ரானுவ விமான தளம் இஸிஸ் வசமாகி உள்ளது. மேலும் இந்த விமான தளம் அருகே அந்நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 150 பேரை இஸிஸ் இயக்கத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும்,விரைவில் அவர்கள் கொல்லப்பட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Published by

Leave a comment