-
கடந்த 3 நாட்களாக கொபானியில் தொடரும் மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் இயக்கத்தினர் பலி!
– MJ டமஸ்கஸ்: சிரியா-துருக்கி எல்லைப்பகுதியான கொபானி பிரதேசத்தில் ஐ.எஸ் மற்றும் குர்திஷ் இராணுவத்தினருக்குமிடையிலான பலத்த சண்டை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இரு தரப்புக்குமிடையே கடந்த 3 தினங்களாக இடம்பெற்ற கடும் மோதலில் நூற்றுக்கும் அதிகமான ஐ.எஸ். இயக்கத்தினர் பலியாகியுள்ளனர்.
-
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவன் தற்கொலை – மாவடிவேம்பில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: சுந்தரர் வீதி,மாவடிவேம்பை சேர்ந்த தயாபரன் சதீஸ் என்ற எட்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன்,நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை சென்று வீடு திரும்பி பகல் உணவு உட்கொண்டிருக்கும்போது , இவருடன் கல்வி பயிலும் சக மாணவன் ஒருவனின் தந்தை சதீஸின் வீட்டுக்கு வந்து காரசாரமாக பேசி எச்சரிக்கை செய்துவிட்டு,சதீஸின் தாயாருக்கும் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு சென்றுள்ளார்.
-
பாலர் பாடசாலைகளின் நிகழ்வுகளில் இசைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
-எம்.எச்.எம்.அன்வர்- காத்தான்குடி;புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையின் வருடாந்த பாலர் விளையாட்டு விழா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழுவின் தலைவரும் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அல்ஹாஐ் எச்.எம்.எம் .பாக்கீர்BA/JP தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எல் ஏ எம் ஹிஸ்புல்லா MA/MP கலந்து கொண்டார்.
-
வாரஉரைகல் ஆசிரியருக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் பகிரங்க மடல்
அன்புடன் வார உரைகல் ஆசிரியர் அவர்களுக்கு, உங்களது பத்திரிகையினை தொடர்ச்சியாக வாசிக்கின்றவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் அதில் வெளிவரும் செய்திகள் ஆக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக எனது சில முக்கிய அவதானங்களை தங்களுடன் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
-
ஹிஜ்ரி – 1436ம் வருட புனித முஹர்ரம் மாதம் தொடர்பாக விஷேட மார்க்க விளக்க பயான் தொடர் நிகழ்வுகள்
CMM. அமானி அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, புனித முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள், ஹிஜ்ரத் உணர்த்தும் படிப்பினைகள், தாஸுஆ மற்றும் ஆஷூறா நோன்புகள் போன்றவற்றின் சிறப்புக்கள் தொடர்பாக விஷேட மார்க்க விளக்க பயான் தொடர் நிகழ்வுகளை சகல ஜூம்ஆப் பள்ளிவாயல்களிலும் மேற்கொள்ளவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றது.
-
உலக சேமிப்பு தின நிகழ்வு – 2014
பழுலுல்லாஹ் பர்ஹான் பொலனறுவை: ஓக்டோபர் மாதம் 31ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு செலான் வங்கியினால் நடாளாவீய ரீதியில் சேமிப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பொலனறுவை மாவட்டத்திற்கான செலான் வங்கியின் செலான் வீட்டுக்கு வீடு 2014 சேமிப்பதற்கான வழி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நிகழ்வு 01-11-2014 இன்று சனிக்கிழமை பொலனறுவை நகரக் கிளையின் ஏற்பாட்டில் பொலனறுவை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றது.
-
அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிக்கரம்: பதுளையில் மன்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி
– எம்.ரீ.எம்.பாரிஸ் பதுளை: கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தையில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது. அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை மாவட்ட மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும்,அம்மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காவும் அல்-கிம்மா நிறுவனம் நேற்று காலை 6.00மணிக்கு பதுளை நோக்கி பயணித்தது.
-
துபாயில் இடம்பெற்ற இலங்கை சுற்றுலா வர்த்தக விரிவாக்கல் நிகழ்வு
– ACM. சப்றி துபாய்: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கா விமானசேவை துபாயில் உள்ள இலங்கைப் பிரதித் தூதுவராலயத்துடன் இணைந்து சுற்றுலா வர்த்தக விரிவாக்கல் கூட்டம் ஒன்றினை அண்மையில் துபாயில் ஏற்பாடு செய்து இருந்தது . கிரவுன்ட் பிளாசா கோட்டலில் இடம் பெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சுமார் 80 க்கும் மேற்பட்ட கம்பனிகள் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர் .
-
‘குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அல் அறபிய்யா’ அறபிக்கல்லூரி இன்று ஆரம்பமானது
காத்தான்குடி: வல்ல அல்லாஹ்வின் பேரருளால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆண்களுக்கான அறபுக்கல்லூரி இன்று (01.11.2014) துவக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அல் அறபிய்யா எனும் பெயரைத் தாங்கிய இக்கல்லூரியில் சுமார் ஒன்பது மாணவர்கள் இணைந்து கொண்டனர். அறபுக்கல்லூரியின் எதிர்கால திட்டங்கள், முன்னெடுப்புகள் போன்ற அம்சங்கள் பயானில் விபரிக்கப்பட்டன.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்டக் குழுக்கூட்டம்
அட்டாளைச்சேனை: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்டக் குழுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை 2014.11.02 ஆந் திகதி அட்டாளைச்சேனையில் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் ‘கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. எஹியாகான் தெரிவித்தார்.
-
அட்டாளைச்சேனை அந்நூர் மைதானத்துக்கு முனாஸின் கோரிக்கையில் பார்வையாளர் மண்டபம்
– பைஷல் இஸ்மாயில் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை அந் – நூர் மகா வித்தியாலயத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு மிக நீண்ட காலத் தேவையாக இருந்துவந்த பார்வையாளர் அரங்கம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர்.
-
அ.இ.ம.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்
– பூமுதீன் கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர அதியுயர் பீட கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு உயர்பீட உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அழைப்பு விடுத்துள்ளார்.