Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொஸ்லந்த மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரண உதவி

    கொழும்பு: கொஸ்லந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பாகிஸ்தான் அரசாங்கம் அன்பளிப்பு செய்த முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்று இந்நாட்டுக்கு வந்தது. நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான சி 130 விமானத்தில் இந்த அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

  • ஜனாஸா அறிவித்தல்.

    காத்தான்குடி;புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் வசித்து வந்த எஸ்.பாத்துமுத்து (04.11.2014 செவ்வாய்க்கிழமை) இன்று மாலை காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன். அன்னாரின் ஜனாஸா தொழுகை 05.11.2014 புதன்கிழமை காலை 08.00 மணியழவில் புதிய காத்தான்குடி நுாறாணியா ஜூம்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

  • இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி காலி- புதிய மாணவர் அனுமதி-2015

    – FM. பர்ஹான் காலி: இன்ஷா அல்லாஹ் 2015 ஜனவரிமாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்காக மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவிஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவுஎன்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். பின்வரும் தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்:

  • ஊர்வீதி அபிவிருத்தி தொடர்பான முதற்கட்ட பணி ஆரம்பம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் வீதி விஸ்தரிப்பு பணிகளின் முதற்கட்டமாக 03-11-2014 நேற்று திங்கட்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளினால் அளவையிடும் பணிகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக வீதியின் மத்தியிலிருந்து வீதி அபிவிருத்திக்கு தேவையான பகுதியை அடையாளமிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • 322 ஈராக் பழங்குடியினரை சுட்டுக்கொன்ற ஐ.எஸ்!

    அன்பார்: ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு சுன்னி பழங்குடியினர் 322 பேரை படுகொலை செய்திருக்கிறது. கிணரொன்றில் இருந்து 50 க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஈராக் மனித உரிமை அமைச்சு, அல்பு நிம்ர் பழங்குடியைச் சேர்ந்த 60 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

  • ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் யார்? பிரதி தவிசாள் ஏ.எம்.நௌபரின் சிறப்பு நேர்காணல்

    –  எம்.ரீ.எம். பாரிஸ்  ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது சபை அமர்வு கடந்த ஓக்டோபர் 30.2014ந்திகதி நடைபெற இருந்த நிலையில், சபை உறுப்பினர்களால் பகிஷ்கரிக்கப்பட்டது. இது தொடர்பிலும் அடுத்த தவிசாளர் யார்? என்ற கேள்விக்கு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்தார்.

  • பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் இஸ்லாமிய புதுவருட கலை நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான ஹிஜ்ரி -1436 இஸ்லாமிய புதுவருட கலை நிகழ்வுகள் 2014-11-02 நேற்று ஞாயிற்றுக்கிழமை  பிஸ்மி தலைமையகத்தில் இடம்பெற்றது. பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். அஸ்ஹர் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 220 மாணவ மாணவிகள் கலந்து கொண்டதோடு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பிஸ்மி குழுமத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • இலங்கை மின்சார சபையின் 45 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வு

    ஹாசிப் யாஸின் கல்முனை: இலங்கை மின்சார சபையின் 45 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுகூடலும், ஆண்டுப் பூர்த்தி விசேட நிகழ்வுகளும் இன்று (03) பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • ‘முஸ்லிமின் ஒரு நாள்’ – தொடர் 03

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) ஸனாஇய்யா: அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள் , தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

  • அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்து தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்

    அபுதாபி : அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அபுதாபி இறுதி டெஸ்ட் போட்டியை வென்ற பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆரம்பித்த  பாகிஸ்தான் அணி, யூனிஸ்கானின் இரட்டைசதம் மிஸ்பா உல் ஹக் மற்றும் அசார் அலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 570 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

  • அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒஸ்ரியா பயணம்

      எ.எச்.எம்.பூமுதீன் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் இன்று (03/11/2014) அதிகாலை ஒஸ்ரியா பயணமானார்.  ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு  செய்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே அமைச்சர் ஒஸ்ரியா பயணமானார்.

  • இட ஒதுக்கீடும் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் பங்கேற்பு.

    -டீன் பைறுாஸ்- காத்தான்குடி: புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையின்   நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (03.11.2014 திங்கற்கிழமை)மேற்படி பாலர் பாடசாலையின் தலைவரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  எச்.எம்.எம். பாக்கீர் BA/JP தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதி  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக்-Eng கலந்து கொண்டதுடன் அன்னாரினால் அடிக்கல்லும் நடப்பட்டது.

←Previous Page
1 … 626 627 628 629 630 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar