துபாயில் இடம்பெற்ற இலங்கை சுற்றுலா வர்த்தக விரிவாக்கல் நிகழ்வு

dubai (2)– ACM. சப்றி

துபாய்: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கா விமானசேவை துபாயில் உள்ள இலங்கைப் பிரதித் தூதுவராலயத்துடன் இணைந்து சுற்றுலா வர்த்தக விரிவாக்கல் கூட்டம் ஒன்றினை அண்மையில் துபாயில் ஏற்பாடு செய்து இருந்தது . கிரவுன்ட் பிளாசா கோட்டலில் இடம் பெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சுமார் 80 க்கும் மேற்பட்ட கம்பனிகள் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர் .

துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதிநிதி எம். எம். அப்துல் றஹீம் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . இலங்கை விமான சேவை வதிவிட பிரதிநிதி அஞ்சலோ புஞ்சி ஹேவா,  இலங்கை உல்லாச அபிவிருத்தி சபையின் சிரேஷ்ட அதிகாரி,  திருமதி அச்சினி தாந்துனாகே ஆகியோர் இலங்கையின் சுற்றுலாதுறை சம்பந்தமான விரிவாக்கம் ஒன்றினை எடுத்துரைத்தனர் .

அப்துல் றஹீம் தனதுரையில்,

“இலங்கையில் ஏற்பட்ட நிரந்தர அமைதியினால் சுற்றுலாதுறை வளர்ச்சியடைந்து வருவதாகவும் துபாயில் உள்ள பல்தேச கம்பனிகள் எதிர்வரும் காலங்களில் தங்களது வலய கூட்டம், மற்றும் வர்த்தக கண்காட்சிகளை இலங்கையில் ஏற்பாடு செய்வது இலாபகரமானதாக இருக்கும்” என எடுத்துரைத்தார் .

இலங்கை இளைஞர் சேவையின் கலாசாரக் குழுவினரின் நடன, இசை, நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இலங்கையில் இருந்து 10 க்கும் மேற்பட்ட கம்பனிகள் துபாயில் உள்ள கூட்டுப் பேச்சுவார்தைகளில் கலந்து கொண்டனர் . இன் நிகழ்வு இராப்போசன வைபவத்துடன் நிறைவுபெற்றது .

dubai (2)

dubai

dubai (3)

Published by

Leave a comment