அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, புனித முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள், ஹிஜ்ரத் உணர்த்தும் படிப்பினைகள், தாஸுஆ மற்றும் ஆஷூறா நோன்புகள் போன்றவற்றின் சிறப்புக்கள் தொடர்பாக விஷேட மார்க்க விளக்க பயான் தொடர் நிகழ்வுகளை சகல ஜூம்ஆப் பள்ளிவாயல்களிலும் மேற்கொள்ளவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றது.
பொதுமக்களை சத்திய இஸ்லாத்தின் பால் நெருங்கச்செய்யும் பொருட்டும், மலர்ந்துள்ள இஸ்லாமிய புது வருடத்தின் சிறப்புக்கள், புனித முஹர்ரம் மாதத்தில் விஷேடமாக புரியப்படும் அமல்கள், நோன்புகள் போன்ற விடயங்கள மக்களுக்கு ஞாபகப்படுத்தவும், அந்த அமல்களின் பால் மக்களை அழைப்பதற்காகவும் இந்த பயான் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
எனவே, மேற்படி பயான் நிகழ்வுகள் அனைத்தும் இன்ஷா அல்லாஹ் 02.11.2014ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இஷாத்தொழுகை முடிந்தவுடன் இடம்பெறவுள்ளது.
பள்ளிவாயல் பயான் மேற்கொள்பவர் விபரம்
01. ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆப்பள்ளி, கா.குடி- 05
மௌலவி, அல்ஹாஜ் HM. ஷாஜஹான் (பலாஹி)
02. முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப்பள்ளி, கா.குடி-03
மௌலவி, அல்ஹாஜ் MI . அப்துல் கபூர் (மதனி)
03. பெரிய மீரா ஜூம்ஆப்பள்ளி, கா.குடி- 01
மௌலவி அல்ஹாஜ் AM. ஹாறூன் (றஷாதி)
04. நூறாணியா ஜூம்ஆப்பள்ளி, புதிய கா.குடி
மௌலவி அல்ஹாஜ் MIM. முஸ்தகீம் அஹ்மத்(பலாஹி)
05. பத்ரிய்யா ஜூம்ஆப்பள்ளி, புதிய கா.குடி
மௌலவி அல்ஹாஜ் HMM. வலீத் (பலாஹி)
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
செயலாளர்
அஷ்ஷெய்க் ஆர். ஜிப்ரி (மதனி) B A
Published by

Leave a comment