உலக சேமிப்பு தின நிகழ்வு – 2014

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

பொலனறுவை: ஓக்டோபர் மாதம் 31ம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு செலான் வங்கியினால் நடாளாவீய ரீதியில் சேமிப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பொலனறுவை மாவட்டத்திற்கான செலான் வங்கியின் செலான் வீட்டுக்கு வீடு 2014 சேமிப்பதற்கான வழி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நிகழ்வு  01-11-2014 இன்று சனிக்கிழமை பொலனறுவை நகரக் கிளையின் ஏற்பாட்டில் பொலனறுவை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றது.

செலான் வங்கியின்  பொலனறுவை நகரக் கிளையின் முகாமையாளர் துஷான் பெர்ணாட்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கியின்  பொலனறுவை நகரக் கிளையின் உதவி முகாமையாளர் உட்பட அதன் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது வர்த்தக நிலையங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சென்ற செலான் வங்கியின்  பொலனறுவை நகரக் கிளையின் முகாமையாளர் உள்ளிட்ட அதன் உத்தியோகத்தர்களினால் செலான் வீட்டுக்கு வீடு 2014 சேமிப்பதற்கான வழி  நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விஷேட கையேடும், செலான் வங்கியின் சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்பு கணக்குகள், வெளிநாட்டு சேமிப்புக்கணக்கு மற்றும் நிலையான வைப்புக்கள் தொடர்பான விஷேட கையேடும் பொது மக்களுக்கும், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment