கடந்த 3 நாட்களாக கொபானியில் தொடரும் மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் இயக்கத்தினர் பலி!

syria– MJ

டமஸ்கஸ்: சிரியா-துருக்கி எல்லைப்பகுதியான கொபானி பிரதேசத்தில் ஐ.எஸ் மற்றும் குர்திஷ் இராணுவத்தினருக்குமிடையிலான பலத்த சண்டை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இரு தரப்புக்குமிடையே கடந்த 3 தினங்களாக இடம்பெற்ற கடும் மோதலில் நூற்றுக்கும் அதிகமான ஐ.எஸ். இயக்கத்தினர் பலியாகியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கெடுக்க அலப்போ மற்றும் ரக்கா ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்த ஐ.எஸ். இயக்கத்தினரே இத்தாக்குதலில் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

கொபானியில் இடம்பெற்றுவரும் இருதரப்பு மோதலில் இதுவரை 958 பேர் பலியாகியுள்ளனர். இவர்களுள் 576 ஐ.எஸ். இயக்கத்தினர், 361 குர்திஷ் இராணுவத்தினர் மற்றும் 21 பொதுமக்கள் உள்ளடங்குவர். 2011 இல் இருந்து இடம்பெற்றுவரும் சிரியாவின் உள்ளுர் கலவரங்களில் இதுவரைக்கும் 180,000 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

syria

Published by

Leave a comment