வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவன் தற்கொலை – மாவடிவேம்பில் சம்பவம் 

 
student suicide– ஏறாவூர் அபூ பயாஸ் 
மட்டக்களப்பு: சுந்தரர் வீதி,மாவடிவேம்பை சேர்ந்த தயாபரன் சதீஸ் என்ற எட்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன்,நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை சென்று வீடு திரும்பி பகல் உணவு உட்கொண்டிருக்கும்போது , இவருடன் கல்வி பயிலும் சக மாணவன் ஒருவனின் தந்தை சதீஸின் வீட்டுக்கு வந்து காரசாரமாக பேசி எச்சரிக்கை செய்துவிட்டு,சதீஸின் தாயாருக்கும் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு சென்றுள்ளார்.

இதனை கேட்ட மாணவன் சதீஸின் தாயார்,”பாடசாலையில் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை அதிபரிடம் கூறி தீர்வைப் பெற்றுக்கொள்வோமே, திங்கள் கிழமை பாடசாலைக்கு வருகிறேன்”  என்று கூறியபோதும் முரண்டுபிடித்த சக மாணவனின் தந்தை “உனது மகன் வெளியில் வந்தால் என்ன செய்கிறேன் பார்” என்று மீண்டும் எச்சரிக்கை செய்துவிட்டு சென்றுள்ளார்.
பகல் உணவை உட்கொண்ட சதீஸ் சாமியரையினுள் நித்திரைக்காக  சென்றதும்,பிற்பகல் மூன்று மணியளவில் அவனது தாயார் தேனீர் கொடுப்பதற்காக சதீஸை எழுப்பச்சென்றபோது அவ்வரையினுள் துனியோன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை அவதானித்துள்ளார்.
சம்பவம் பற்றி மாணவனின் தாயார் தெரிவிக்கையில் சக மாணவனின் தந்தை எனது வீட்டுக்கே வந்து மகனை எச்சரிக்கை செய்ததோடு,எனக்கும் தகாத வார்த்தைகளால் பேசியதை தாங்க முடியாமல்தான் தற்கொலை செய்துள்ளான் என கூறினார்.
   சம்பவ இடத்துக்கு விசாரணைகளை மேற்கொள்ள ஏறாவூர் பொலிசார் சமூகமளித்து பிரேத பரிசோதனைக்காக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களின் உத்தரவின் பேரில் சடலத்தை செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
பிரேதபரிசோதனையின் பின்னர் “கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்கியதால் குரல்வளை இறுகி மூச்சுத்திணறி மரணம் சம்பவித்துள்ளது” என்று தீர்ப்பளித்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பொலிசாரைக் கேட்டுக்கொண்டார்.???????????????????????????????

Published by

Leave a comment