Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ரீ.எல். ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா-காத்தான்குடியில் இன்று

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிரேஷ்ட ஊடகவியலாளரும் தேசிய சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31-10-2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ளது.

  • ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து மரணத்தைத் தழுவிய 6 பெண் குழந்தைகளின் தந்தையான சவுதி வாலிபர்!

    – MJ டமஸ்கஸ்: சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் கொபேன் பகுதியில் குர்திஸ் போராளிகளுக்கும் ஐ.எஸ். இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதலில் 42 வயதையுடைய அல் ஸஹ்ரானி எனும் சவுதிப்பிரஜை மரணத்தைத் தழுவியுள்ளார்.

  • பதுளையில் மன்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிக்கரம்

    – எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காண நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு கஸ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை மாவட்ட மக்களின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதற்காகவும், அம்மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காவும் அல்-கிம்மா நிறுவனம் நாளை காலை 6.00மணிக்கு பதுளை நோக்கி பயனிக்கவுள்ளது.

  • மரண சிந்தனை என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு

    – கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 30 OCT 2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • முதலாவது ஹாபிழ் பட்டமளிப்ப்பு விழா : பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய காத்தான்குடி

    காத்தான்குடி: புதிய காத்தான்குடி 01 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் இயங்கி வரும் தாருல் புர்கான் பகுதி நேர அல்குர்ஆன் மனன பீடத்தில் 30 ஜுஸ்உக்களையும் மனனமிட்டு 01வது ஹாபிழாக தடம்பதித்த நூருத்தீன் முஹம்மத் அஜ்வர் என்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31.10.2014 வெள்ளிகிழமை இஷா தொழுகையின் பின் புதிய காத்தான்குடி 01 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஜனாதிபதியி​ன் அழைப்பு வேடிக்கையா​னது – ஹரீஸ் எம்.பி

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: தென்பகுதியின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியும் மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானது. இன்று கட்சி நினைத்தால் பாரிய அபிவிருத்திகள் பற்றிப் பேசலாம். ஆனால் சமூக விடயத்தை புறந்தள்ளிவிட்டு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிரே ஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • தன்னை அடையாளப்படுத்த இருக்கிறார் ஒசாமாவைக் கொன்ற அமெரிக்க சீல் வீரர்!

    – AF- 90 வாஷிங்டன்: அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றது யார் என்று இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால் சுட்டுக் கொன்றவரே விரைவில் தன்னை வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்போகிறார். அமெரிக்காவின் பாக்ஸ் நிறுவன டிவி மூலம் அவர் தன்னை வெளிப்படுத்தவுள்ளார்.

  • ‘அரசு திட்டமிட்டிருந்தால் உயிர்ப்பலிகளை தடுத்திருக்கலாம்’

    பதுளை: பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றத் தவறியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  • மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SFRD அமைப்பினால் மருத்துவ சேவை முகாம்

    – ஸக்காப் ஸஜாத் பதுளை: நேற்று கொஸ்லந்தை,  மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 300க்கும் அதிகமானவர்கள் பதுளை, கொஸ்லந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ உதவிகளில் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனம் ( SFRD) ஈடுபட்டு வருகின்றது.

  • பொத்துவில் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் நுழைவாயில் கோபுர நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

    – ஹாசீப் யாஸீன் பொத்துவில்: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதியொதுக்கீட்டின் மூலம் பொத்துவில் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் நுழைவாயில் கோபுர நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  (30) இடம்பெற்றது. கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

  • தனக்கு எதிரான 30 நபர்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்!

    – MJ பக்தாத்: மேற்கு ஈராக்கின் அல் பாக்கிர் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தினர், மோதல்களின் போது தங்களுக்கு எதிராகச் செயற்பட்டனர் என்ற குற்றத்திற்காக 30 ஈராக்கிய ஆண்கள் அணிவகுக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

  • மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர்,பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 630 631 632 633 634 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar