பாலர் பாடசாலைகளின் நிகழ்வுகளில் இசைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

-எம்.எச்.எம்.அன்வர்-
???????????????????????????????காத்தான்குடி;புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையின் வருடாந்த பாலர் விளையாட்டு விழா  மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழுவின்  தலைவரும் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அல்ஹாஐ் எச்.எம்.எம் .பாக்கீர்BA/JP தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எல் ஏ எம் ஹிஸ்புல்லா MA/MP  கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்விற்று கௌரவ அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இன் விசேட உரை ஒன்று இடம் பெற்றது அவர் உரையாற்றுகையில்……..

பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை  வெறுமெனே நிகழ்வினை நடாத்தினோம் முடித்தோம் என்றில்லாது ஒரு எடுத்துக்காட்டான நிகழ்வாக அது அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்..

 மேலும் அவர் தெரிவிக்கையில் 

நான் இங்கு இரு விடயங்களை கூறி வைக்க விரும்புகின்றேன்.

ஒன்று… பாலர் பாடசாலை விளையாட்டுக்கள் இசை இல்லாத, இசையினை கலக்காத ஒரு நிகழ்ச்சியாக அமையவேண்டும். இசை இஸ்லாத்திற்கு முறணான செயற்பாடாகும் அவ்வாறு இருப்பின் நாங்களும் இதற்கு ஆதரவளித்ததாக அமையும் எத் தெரிவித்தார்.

இரண்டாவது விடயம்..

சுமார் இரண்டு மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வுகள் இடையிலுள்ள தொழுகைகளுக்கு இடமளிக்காமல் நிகழ்வுகள் இடம்பெறுவதனை காணமுடிகிறது.  தொழுகைகள் கழா ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகம். ஆகவே தொழுகைக்கு இடமளித்து நிகழ்வுகளை நடாத்த எதிர்காலத்தில் நிருவாகங்கள் முயற்சி எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுக்கு நகர முதல்வர் எஸ் எச்.எம்.அஸ்பர் JP ,பிரதேச கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன்JP, பிரதி நகர முதல்வர் எம் ஐ எம் nஐஸீம்JP, அல் மனார் கல்வி நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் மும்தாஸ்(மதனி)BA, நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் JP,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே எல் எம் பரீட்JP, திவிநெகும முகாமையாளர் எம் ஏ எம் சுல்மி JP,ஹெப்பி கிட்ஸ் பாடசாலையின் தலைவரும் திவிநெகும உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம்.அப்துல்லா JP, புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழுவின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.டீன் பைரூஸ் JP, உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment