Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முகவரி தெரியாத ஹூனைஸ் பாருக்கிற்கு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்த தலைவர் றிசாதுக்கு எதிராக அபாண்டங்களை சுமத்துகின்றார் என்கின்றார் அமீர் அலி

    வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: எமது இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது ஆட்களை அதிகம் அதிகம் தேடி சென்று சேர்க்கின்ற கட்சியல்ல, நியாயத்துடனும், நேர்மையுடனும் யார் இணைய முடியுமோ, ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றாக பார்க்க முடியுமோ, அப்படிப்பட்டவர்கள் யாராக இருக்க முடியுமோ அவர்கள் தான் இந்த கட்சியின் அங்கத்தவர்களாக, பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகளாக வரமுடியும் என்ற நிய்யத்துடன் இருக்கின்றோம் என்று சமூர்த்தி, வீடமைப்பு பிரதி அமைச்சர்…

  • தேசியத் தலைவருக்கு சென்றல் கொமிட்டி பாராட்டு

    MIM. Zarook J.P காங்கேயனோடை: ஆத்மீக தலைவர் ஒருவரை முதல்வராக தந்த எமது தேசியத் தலைவர் ஹக்கீம் சேர் அவர்களுக்கு எமது சென்றல் கொமிட்டி பாராட்டு தெரிவிக்கின்றது. கடந்த 07-02-2015 அன்று இரவு 8 மணிக்கு சக்தி தொலைக்காட்சி News 1st யில் மக்கள் கருத்துப் பகுதியில் கிழக்கு மாகாண முதல்வர் தொடர்பில் பொது மகன் ஒருத்தர் எமது முதல்வரை கொச்சைப்படுத்தி பேசினார்.

  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவிருந்த ஊடக செயலமர்வு பிற்போடப்பட்டுள்ளது

    SLMMF கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் எதிர்வரும் 14ஆம் (14.02.2015) திகதி கொழும்பில் நடாத்திவிருந்த ஊடக செயலமர்வு தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு, எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • கட்சிகளில் இருந்து எவர் பிரிந்து வந்தாலும் அவர்களை நாம் எமது கட்சியில் ஒரு போதும் இணைத்துக்கொள்ளப் போவதில்லை: றிசாத் பதியுதீன்

    வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: தற்போது எந்தக்கட்சிகளில் இருந்து எவர் பிரிந்து வந்தாலும் அவர்களை நாம் எமது கட்சியில் ஒரு போதும் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், தேர்தல் ஒன்று வருகின்ற போது அந்த சந்தர்ப்பத்தில், எமது கட்சியில் இணைய விருப்பம் கொண்டு வந்தால் தாம் வகிக்கும் அனைத்து பதவிகளையும் துறந்து அவர்கள் வருவார்கள் எனில் அது தொடர்பில் கவனம்…

  • த.தே.கூவுக்கு மு. காங்கிரஸ் மீண்டும் அழைப்பு

    திருகோணமலை: இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில் நிபந்தனையின்றி இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

  • காத்தான்குடியில் ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிய நான்கு வாகனங்கள்

    காத்தான்குடி: ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய சம்பவம் இன்று பகல் காத்தான்குடி நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினால் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதுடன் வாகனங்களுக்கும் சேதமும் ஏற்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் மட்டக்களப்பு: இச்சம்பவம் மட்டக்களப்பு – செங்கலடிப் பிரதேசத்தில் 07.02.2015 இரவு 7:40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ரயில் வண்டி மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

  • சயீத் அஜ்மல் மீதான தடை நீக்கம்: சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி

    லாஹூர்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது. 37 வயதான அஜ்மல் தனது பந்துவீச்சு முறையைத் திருத்திக் கொண்டதை அடுத்து, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் அரசியல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை

    கொழும்பு: பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

  • டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி இளைஞர் மரணம்

    – ஜூனைட் எம். பஹ்த் காத்தான்குடி: புதிய காத்தான்குடி கோழிவியாபாரி வீதியைச் சேர்ந்த எம்.எச்.சிபான் (வயது 26) எனும்  இளைஞன் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

  • அமைச்சர் ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

    கொழும்பு: பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை இல்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த 114 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

  • கிழக்கு மாகாணசபையில் தொடரும் சர்ச்சைகள்

    திருகோணமலை: கிழக்கு மாகாணசபையில் பல நாட்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னர் புதிய முதலமைச்சர் ஒருவர் பதவியேற்றுள்ள போதிலும் புதிய ஆட்சியமைப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நசீர் அஹமட் மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

←Previous Page
1 … 526 527 528 529 530 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar