Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது”

    கொழும்பு: நாட்டின் தேசிய வரு மானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் முழு வரி வருமானத்தையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ என ஒரு குடும்பமே நிர்வகித்தது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

  • மரதன் ஓடிய 15 வயது மாணவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    அம்பலாந்தோட்டை: மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 15 வயது மாணவர் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்றுள்ளது. அம்பலாந்தோட்டை போலான மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் சமோத் சத்ஸர என்ற மாணவனே இவ்வாறு பரிதாபமாக மரணமாகியுள்ளார்.

  • ‘முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது’

    கொழும்பு: 2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

  • கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அஹமட் பதவியேற்றார்

    திருகோணமலை: கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று மாலை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

  • விம்பிள்டன் ஆங்கில பாடசாலையின் 2வது ஆண்டு வருடாந்த நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் விம்பிள்டன் ஆங்கில பாடசாலையின் 2வது ஆண்டு வருடாந்த நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை விம்பிள்டன் ஆங்கில பாடசாலையில் இடம்பெற்றது.

  • காத்தான்குடியில் சிரமதானம் எனும் பேரில் வெள்ள நிவாரண மோசடி

    – ஜூனைதா ஏ. காதர் காத்தான்குடி: கடந்த டிசம்பர்-ஜனவரி மாதத்தில் இலங்கையில் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கில் காத்தான்குடியின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் வசிக்க முடியாமையால் பொது முகாம்களில் வசிந்து வந்தனர்.

  • டெங்கு ஒழிப்பு சிரமதானம்

    KIC காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு 06.02.2015 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காத்தான்குடி மத்திய கல்லூரியின் நுழைவாயில் உட்பகுதி சிரமதானம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது.

  • ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு

    ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர் பயான் நிகழ்த்தியவர் – மௌலவி அஷ் ஷெய்க் அனஸ் (ரஷாதி) (விரிவுரையாளர், ஹிழுரியா                அரபுக் கல்லூரி, வெலிகம) தலைப்பு – மஸ்ஜிதுடைய பங்களிப்பும் அதன் நிருவாகிகளின் தகுதிகளும் கடமைகளும்

  • ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்து ரவூப் ஹக்கீம் இடைநிறுத்தியுள்ளார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்துள்ளார்.

  • இலங்கையில் 5000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

    முஹம்மது பஹத் கொழும்பு: 5026 போலி வைத்தியர்கள் தொடர்பான தகவல்கள் 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 22,313 வைத்தியர்களை இந்த ஆய்விற்கு உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவின் டி சொய்ஸா தெரிவிக்கின்றார்.

  • மட்டகளப்பில் படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை

    முஹம்மது பஹத் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் படகு கவிழ்ந்ததால் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

  • கட்சியையும் கட்சித் தலைமையையும் விமர்சித்து வந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது கட்சியைஅழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் – ஸரூக் ஜே. பி

    MIM. Zarook மட்டக்களப்பு: பெருந் தலைவர் அஸ்ரப் அவர்கள் கிராம மக்களை அத்திவாரமாக கொண்டு கட்டி எழுப்பிய எமது கட்சியை தற்போதைய தலைவரும் அவருடன் உள்ளவர்களும் கறையானைப் போல் கட்சியை அழித்து விட்டனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மோசமான நிலமையில் கட்சி தோற்றுப் போவதை நாம் விரும்பவில்லை.

←Previous Page
1 … 528 529 530 531 532 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar