கொழும்பு: பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்த ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த அரசாங்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான அமைச்சர் ஒருவர், இரண்டு நிறுவனத் தலைவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Published by

Leave a comment