காங்கேயனோடை: ஆத்மீக தலைவர் ஒருவரை முதல்வராக தந்த எமது தேசியத் தலைவர் ஹக்கீம் சேர் அவர்களுக்கு எமது சென்றல் கொமிட்டி பாராட்டு தெரிவிக்கின்றது. கடந்த 07-02-2015 அன்று இரவு 8 மணிக்கு சக்தி தொலைக்காட்சி News 1st யில் மக்கள் கருத்துப் பகுதியில் கிழக்கு மாகாண முதல்வர் தொடர்பில் பொது மகன் ஒருத்தர் எமது முதல்வரை கொச்சைப்படுத்தி பேசினார்.
ஒரு கால் நடை அமைச்சரை முதல்வராக தெரிவு செய்துள்ளார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் எமக்கு கிடைக்காமல் முஸ்லிம்களுக்கு கொடுத்துவிட்டார். இவர் பாகுபாடு காட்டியுள்ளார் என்று அச் செய்தியில் பிரசுரமாகியது. இவற்றில் இரண்டு விடயங்கள் கருத்திற் கொள்ளல் வேண்டும்.
1. எமது முதல்வரை கொச்சயாக வர்ணனை செய்தது பிழை. அவர் ஒரு ஹாபிஸ். அவர் மிகவும் தகுதி வாய்ந்த பெறுமதியான முதல்வர். இவருடைய தகுதியைப் பார்த்தால் அல்-ஹாபிஸ், பொறியியளாலர், கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் தொழிலதிபர், இக் கருத்தை காட்சிப்படுத்தும் இவ் ஊடகம் இரு சமூகங்களின் அபிலாசையை கேட்டு அவர்களின் கருத்துக்களை எவ்வாறு தெரிவிக்கின்றார்கள். அதன் அடிப்படையில் காட்சிப்படுத்த வேண்டும்.
2. இணங்களுக்கிடையில் பிளவுகளை துாண்டுவது போல் செயல்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்திகழ்ச்சி பகுதிக்குறிய பணிப்பாளரை சிரச மற்றும் சக்தி நிறுவனம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
MIM Zarook JP – SLMC அமைப்பாளர், காங்கேயனோடை.
Published by

Leave a comment