மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

unnamedஎம்.எஸ்.எம்.ஸப்றாஸ்

மட்டக்களப்பு: இச்சம்பவம் மட்டக்களப்பு – செங்கலடிப் பிரதேசத்தில் 07.02.2015 இரவு 7:40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ரயில் வண்டி மோதுன்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த 17 வயதுடைய சரவணபவன் சஞ்ஜீவன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 17 வயதுடைய கந்தசாமி பிரேம காந்தன் என்பவர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஏறாவூர் பிரதேச தீடீர்மரண விசாரணையதிகாரி எம.எஸ்.எம் நஸிர் மரணவிசாரணை மேற்கொண்டார்.

குறித்த நபர்கள் இருவரும் கைத்தொலைபேசியில் பாடலை ரசித்துக் கொண்டு தண்டவாளத்தில் படுத்திருந்தவேளை கொழும்பு நோக்கிச் சென்ற எண்ணெய் ரயில் வண்டியில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment