டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி இளைஞர் மரணம்

janasa– ஜூனைட் எம். பஹ்த்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி கோழிவியாபாரி வீதியைச் சேர்ந்த எம்.எச்.சிபான் (வயது 26) எனும்  இளைஞன் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்த பின்னரே டெங்கு காய்ச்சல் எற்பட்டுள்ளது.

கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞன், தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

இவரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாயளில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாசல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Published by

Leave a comment