காத்தான்குடி மத்திய கல்லூரி 85வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உள்ளுர்,வெளியுர் கழகங்களுக்கிடையிலான ஒரு சினேக புர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள்

mmv (2)– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையின்) 85வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உள்ளுர்,வெளியுர் கழகங்களுக்கிடையிலான ஒரு சினேக புர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடம்பெற இருப்பதனை முன்னிட்டு (சீட்டு எடுத்தல் மூலம் கழகங்களை தெரிவு செய்யும் நிகழ்வு) பாடசாலையின் அதிபர் கேப்டன் யூஎல்.ஏ. முபாரக் தலைமையில் (31.03.2015 செவ்வாய்) பாடசாலையில் இடம்பெற்றது.

போட்டிகள் யாவும் நெக்கவுட் முறையில் இடம்பெற இருப்பதுடன் இச்சுற்றுப் போட்டியில் காத்தான்குடி, ஏறாவுர்,ஓட்டமாவடி,கல்முனை ,அக்கறைப்பற்று என பல ஊர்களில் இருந்தும் சுமார் 20 சம்பியன் கழகங்கள் கால் கலக்க உள்ளன.

mmv (2)

பாடசாலையின் 85 வது ஆண்டு நிறைவினை மிக விமர்சயாக,வித்தியாசமாக கொண்டாடும் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனையை படைக்கப் போகின்றமை விசேட அம்சமாகும்.

இச்சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டி எதிர்வரும் 903.04.2015 வெள்ளிக்கிழமை0 காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் விக்டரி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கல்முனை ஐ.ஆர்.எஸ்.சீ விளையாட்டுக்கழகம் கால் கலக்க உள்ளன.

mmv

இரண்டாம ,மூன்றாம் போட்டிகள 04-05/04/2015 சனி,ஞாயிறு என தொடராக இடம்பெற இருப்பதுடன் இதன் இறுதிப்போட்டி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி இடம்பெறுவுள்ளது.

இப்போட்டிகள் யாலும் காத்தான்குடி கால்பந்தாட் லீக் மற்றும் காத்தான்குடி மத்தியஸ்தர்கள் சங்கம் என்பவற்றின் முழுமையான பங்குபற்றுதலுடன் இடம் பெற இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்றைய நிகழ்விற்கு காத்தான்குடி உதைப்பந்தாட்ட சங்க உபதலைவர் என்.எம்.சாஹிர்,செயலாளர் எம்.வை.ஆதம் ,முகாமையாளர் எம் சமீம் ,மத்திய கல்லூரியின் உப அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் ,எம். இஸ்மாயில் ஆசிரியர் உட்பட கழகங்களுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment