மோக்கா-மோக்கா பாடலை அப்ரி பாடி நக்கல்!! (வீடியோ)

CRICKET-PAK-RSAலாஹூர்: உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வெற்றி கொள்ளாதது குறித்து ‘மோக்கா மோக்கா’ என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் பாகிஸ்தான் வீரர்களை கிண்டல் செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டிருந்தன.

மக்கள் மத்தியில் பலத்த பிரபலம் அடைந்த இந்த விளம்பரம் குறித்து பாகிஸ்தான் வீரர் சகித் அப்ரியிடம், ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதாவது, இந்தியாவுடனான தோல்வி, மோக்கா மோக்கா விளம்பரம் குறித்து உங்கள் மனநிலை என்ன என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு சிரித்துக்கொண்டே அப்ரிடி, அந்த பாடலை பாடியுள்ளார்.

இதற்கிடையில், காலிறுதியில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த இந்திய அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்தியா சந்தித்த இந்த தோல்வியை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போன் செய்து, மோக்கா மோக்கா என்ற பாடலை பாடி கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment