காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 13 மாணவிகளும், 2 மாணவர்களும் 9 ஏ சித்தி

bathurdeen sir badurdeen– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நேற்று வெளியான 2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தில்; 13 மாணவிகளும், 2 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.

இதில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் 9 பேரும்,காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் 3 பேரும்,காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் 2 பேரும் ,காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலய மாணவி ஒருவரும் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

bathurdeen sir badurdeen
எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்

இதேவேளை மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் காத்தான்குடி பிரதேச மாணவிகள் நான்கு பேர் 9 ஏ சித்தி பெற்றுள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் மேலும் தெரிவித்தார்.

balika

Published by

Leave a comment