காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு வந்த பிரதேச கழகங்களுக்கிடையிலான உதை பந்தாட்டப் போட்டியில் 2015ம் ஆண்டுக்கான சம்பியனாக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகஸ்தர் எம்.எம்.எம்.ஜலீல் தலைமையின் போட்டிகள் யாவும் நடைபெற்றன. இப்போட்டியில் காத்தான்குடி பிரதேச எல்லைக்குட்பட்ட சுமார் 12 விலையாட்டுக் கழகங்கள் மேற்படி போட்டியில் பங்குபற்றி இருந்தன.
இறுதிப் போட்டி (31.03.2015 திங்கற்கிழமை) காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து காத்தான்குடி பதுரியா விளையாட்டுக் கழகம் கால்பரீட்சை நடாத்தின.
இறுதிப் போட்டியில் தண்டஉதை மூலம் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் 2015ம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
Published by



Leave a comment