இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசொப்ட் – வருகிறது ‘ஸ்பார்டன்’!

internet exploreநியுயோர்க்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும்.

சென்ற வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். ‘விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும் நுகர்வோருக்கான பிரவுசருக்கு என்ன புதிய பெயரை அளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று அறிவித்தார். எனவே இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் நுகர்வோருக்கான பிரவுசர் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

internet explore

Published by

Leave a comment