வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சை வைத்தே காலம் கடத்தி வந்த, நியூசிலாந்து அணியில் பெயர் சொல்லக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரிதான். 1997ம் ஆண்டு தனது 18வது வயதில் வெட்டோரி நியூசிலாந்து ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்.
295 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரிஇ 305 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 362 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 4531 ரன்களையும் விளாசியுள்ளார்.
கபில்தேவ் மற்றும் இயான் பொத்தம்த்தம் ஆகியோருக்கு அடுத்தபடியாக, டெஸ்ட் போட்டிகளில், 4 ஆயிரம் ரன்கள் மற்றும் 300க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் டேனியல் வெட்டோரிதான்.
36வயதான வெட்டிரோ ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.உலக கோப்பை முடிந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அவர் அறிவித்துள்ளார்.
உலக கோப்பை வெற்றியுடன் விடைபெறலாம் என்று இருந்ததாகவும், ஆனால், அது முடியாமல் போனதாகவும் வெட்டோரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment