காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தில் தரம் எட்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாஹிர் ஆயிஷா என்ற மாணவி சுகயீனம் காரணமாக கடந்த 29.03.2015 ஞாயிறு கொழும்பு வைத்திய சாலையில் காலமானார். இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹிர் மற்றும் காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஆசிரியை எம்.ஐ.உம்மு சல்மா ஆகியோர்களின் ஒரே மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவியின் மரண செய்தி கேட்டு சக பாடசாலை மாணவிகள்,ஆசிரியர்கள் என பலரும் சோகத்தின் இருந்ததினை அவதானி்க்க முடிந்தது. இடம் பற்றாக்குறை என்பதனால் காத்தான்குடி கடற்கரை வீதி இல் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கிள் ஜனாசா வைக்கப்பட்டு மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெண்கள் என பல ஆயிரக்கணக்கான வர்கள் சமூகமளித்து அவரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்தனர்.
ஒவ்வொரு ஆத்மாக்களையும் மரணம் சம்பவித்தெ தீரும் என்பதற்கேற்ப மாணவியின் நல்லடக்கம் 30.03.2015 திங்கள் கலை 09.30 காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
Published by


Leave a comment