Category: Your Kattankudy
-
கொழும்பு தெற்கு துறைமுகம்: 50 இலட்சத்துக்கும் அதிக மக்கள் பார்வை
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தை 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை கருத்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் வருடாந்த ‘ஸகாதுல் பித்ர்’ விநியோகம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வருடந்தோறும் கூட்டாக நடைமுறைப்படுத்திவரும் ஸகாதுல் பித்ர் விநியோகம் வழமைபோன்று இவ்வருடமும் 350 குடும்பங்களுக்கு பங்கிடப்பட்டது. இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலை அன்மித்துள்ள வறிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோழி இறைச்சி என்பன வழங்கப்பட்டன.
-
பதினோறாவது தௌறாஹ் நிகழ்வு
– MACA. நாஸர் ஜமாலி, FM. பர்ஹான் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளலஹி வபறகாதுஹூ எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறி வழமை போன்று இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
-
ரிஸ்வி முப்தியும் பின்னணியும்…
– முகம்மட் ஸாஜி கொழும்பு: கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலமா சபைக்கான தலைவர் தெரிவு இடம்பெற்ற பொழுது, இஸ்லாமி ஆதரவான தலைமையை ஏற்படுத்த இஸ்லாமி திட்டம் போட்டு இருந்தது. என்றாலும் அந்த வாய்ப்பை தப்லீக் முக்கிய உறுப்பினரான ரிஸ்வி முப்தி தட்டிப் பறித்து விட்டார்.
-
‘கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் யூதர்களின் பின்னணியே’: அஸ்வர் ஹாஜி
– AK-42 கொழும்பு: அண்மையில் தாக்கப்பட்ட கிரான்பாஸ் பள்ளிவாயல் பின்னணியில் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் செயற்படுவதாக ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்களும், இத்தாக்குதலை படம் பிடித்த இரகசியக் கமராவும், தாக்குதல் சம்பவங்களைத் தெளிவாக விபரிக்கும் நிலையில், அஸ்வர் இவ்வாறு கூறியிருப்பது, இவ்வருடத்துக்கான சிறந்த நகைச்சுவையாகக் கருதப்படுவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
‘நிகாப் உடையை தடைசெய்வதானால் காவியுடைக் காடையர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்க வேண்டும்’ : விஜித தேரர்
மஹியங்கனை: ஒரு முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை உறுதிப்படுத்தினால், தனது காவி உடையை கழற்றி விட்டு, இராணுவத்தில் இணைந்து கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் எனவும் தற்போது ஞானசார தேரர் அதனை செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாகவும்
-
‘PMGG த.தே.கூ உடன் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் முஸ்லிம்கள் சார் ஒப்பந்தத்தை வடக்கு தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும்’ : ஐ.தே.க முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் முபாறக்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் முஸ்லிம்கள் சார்ந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தை வடக்கு தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் வி.டீ.எம். முபாறக் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
‘கடும்போக்கு பௌத்த காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட கிராண்பாஸ் பள்ளி மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானது’: சிப்லி பாறூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மிகமோசமான மிலேச்சத்தனமான இந்த காட்டுமிராண்டித்தனமான கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் கைநூல் வெளியீட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் ஏற்பாடு செய்த ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் கைநூல் வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
-
இலங்கை பல்லின சமய நாடல்ல: ஓட ஓட விரட்டுவோம்: பொது பல சேனா
குருணாகல்: இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். பொது பலசேனா வின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.
-
வாகரை ஆயுள்வேத மத்திய மருந்தகம் திறந்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் வாகரை: ஆயுள்வேத மத்திய மருந்தகம் நேற்று திங்கட்கிழமை வாகரையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.