கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தை 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை கருத்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கடந்த 5ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 8 ஆம் திகதி முதல் நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 6 நாட்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களும் சுமார் 55 ஆயிரம் வாகனங்களும் இங்கு வந்ததாக அமைச்சர் கூறினார்.
துறைமுகத்தைப் பார்வையிடும் இறுதி நாளான நேற்று நீர்த்தடுப்பு பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் பொதுமக்களுடன் உரையாடினார். கூடுதலான மக்கள் பார்வையிட்ட இடமாக தெற்கு துறைமுகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூறிய அவர், நாட்டின் அபிவிருத்தியை மக்கள் வரவேற்பதையே இது காட்டுவதாக குறிப்பிட்டார்.
– தினகரன்
Leave a comment