வாகரை: ஆயுள்வேத மத்திய மருந்தகம் நேற்று திங்கட்கிழமை வாகரையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி,மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், நிருவாக உத்தியோகஸ்த்தர் நவேஸ்வரன்,சுதேச வைத்தியதுறைப் பணிப்பாளர் திருமதி சிறிதர் மற்றும்; வாரைப் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதகளும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த ஆயுள்வேத மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டது. ஏலவே குறித்த மருந்தகமானது வாகரை கிராம அபிவிருத்தி சங்கத்தின் கட்டிடத்திலே இயங்கி வந்தது.
திறந்து வைக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகக் கட்டிடமானது நிரந்தர வைத்தியர்,போதுமான மருந்துகள் உட்பட சகல வசதிகளையும் கொண்டமைதந்ததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![dsc_0101_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc_0101_11.jpg?w=150&h=99)
![dsc_0072_2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc_0072_21.jpg?w=640&h=425)
![dsc_0101_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc_0101_11.jpg?w=640&h=425)
Leave a comment