Category: Your Kattankudy
-
ஆகில் அஹ்மத்தின் பிறை ஆக்கம் ஆய்வா? அபத்தமா?
– அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) நோன்பு எப்படி நம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ பெருநாள் எப்படி எம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ அதே போல பிறை பிரச்சினையும் சேர்ந்து எம்மை நோக்கி வந்துவிடுகிறது. பிரைவிடயத்தில் அதிகமான வாத பிரதிவாதங்கள் இருந்த போதும் அதில் எது சரியானது அது பிழையானது என்பதை கொஞ்சம் யோசனை உள்ளவர்களும் உண்மையான உணர்வு மக்களும் புரிந்துகொண்டனர்.
-
இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான விமானம் தாங்கி போர்க் கப்பல்
-MJ கொச்சி: இலங்கையில் யுத்தம் ஒழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், நாட்டைக் கட்டி எழுப்பாமல் பௌத்த தீவிரவாதிகளை வளர்த்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கு நெத்தியடியாய் இந்தியா மற்றுமொரு படிப்பினையை எடுத்துக்காட்டி இருக்கின்றது.
-
பள்ளிவாசல் விளம்பர பலகையை அகற்ற முற்பட்டதை அடுத்து பொலிஸார் – பொதுமக்கள் இடையே முறுகல்
மாவத்தகம: கண்டி – குருநாகல் பிரதான வீதியின் மாவத்தகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் ‘அமைதியாகச் செல்லவும்’ என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பலகையை பொலிஸார் அகற்ற முற்பட்டதையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
-
வடமாகாணத்தில் வறுமையொழிப்பு செயற்திட்டத்தை மத்தியவங்கி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
– பழுளுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: வடமாகாணத்தில் வறுமையொழிப்பு செயற்திட்டத்தை மத்தியவங்கி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் விடுத்துள்ள கூட்டறிக்கை
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எமது வணக்கத் தலங்களுள் ஒன்றான கொழும்பு 14 கிராண்ட்பாஸில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது முன்னேற்பாட்டுடனும், நன்கு திட்டமிட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாம் தெட்டத்தெளிவானதும் வெளிப்படையானதுமான எமது பலத்
-
மதத்தீவிரவாதிகளின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படுவது கண்டிக்கத்தக்கது – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இந்நாட்டு முஸ்லிம்களின் மத கலாசார அடிப்படை உரிமைகளை நசுக்குவதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் மதத் தீவிரவாதிகளின் வன்முறைகளின் தொடரிலேயே கிராண்ட்பாஸ் மோளவத்தை பள்ளிவாயலும் தாக்கப்பட்டிருக்கின்றது. பொலிசாரின் ஒத்துழைப்புடனும் ஊக்கப்படுத்தலுடனும் ப
-
மெத்தைப்பள்ளி வாயலின் ஜமாஅத்தார் பட்டியலில் இடம் பெறத் தகுதியானவர்கள் யார்?
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மெத்தைப்பள்ளி வாயலின் மஹல்லா எல்லையானது பின்வரும் பள்ளிவாயல்களின் எல்லைகளை உள்ளடக்கிய பகுதிகளாகும். மெத்தைப்பள்ளி, ஹிழுறியா பள்ளி, குலபஉர்றாசிதீன் பள்ளி,கபுறடிப்பள்ளி, சுஹதாப்பள்ளியாகும்.
-
மெத்தைப்பள்ளிவாயலின் ஜமாஅத்தார் பட்டியல் தயாரித்தல்-மர்சூக் அஹமட் லெப்பை
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஒரு பள்ளிவாயலின் ஜமாஅத்தார் பட்டியல் என்பது ஒரு பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் இடாப்புக்குச் சமனானதாகும். இந்த ஜமாஅத்தார் பட்டியலில் உள்ளவர்களினால் தான் அப்பள்ளிவாயலின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என காத்தான்குடி முகைதீன் மெத்தைப்
-
குவைத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி
– கலீல் பாகவீ குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாட்டின் மூலம் குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கடந்த 08.08.2013 வியாழக்கிழமை (ஹிஜ்ரீ 1434 ஷவ்வால் பிறை 1) காலை 7:30 மணிக்கு குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெற்றன.…
-
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி – மு.கா.கவலை
கொழும்பு: நாடு முழுவதிலும் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் மாற்று சக்தியொன்றின் ஆட்சியே செயற்பட்டுவருகின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற முஸ்லிகளின் ஒன்றியம் மெளனித்து கிடக்கின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அதிருப்தியையும் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.
-
செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
-
மரணப்பிடியில் இலங்கை முஸ்லிம்கள்! தாக்கப்படப்போகும் 25வது பள்ளிவாயல் எது?
-AK-42 கொழும்பு: பௌத்த கலகக் காரர்களின் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றது சுதந்திர இலங்கை. பல நூற்றாண்டுகளாக மூவினத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த புராதன இலங்கையில், பேரினவாதிகளின் துவேசங்கள் அரசியலில் கலந்து பல இலட்சம் உயிர்களையும் பல கோடி சொத்துக்களையும் கடந்த காலங்களில இழந்திருந்தது இலங்கை .