காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் வருடாந்த ‘ஸகாதுல் பித்ர்’ விநியோகம்

kattankudy (4)– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வருடந்தோறும் கூட்டாக நடைமுறைப்படுத்திவரும் ஸகாதுல் பித்ர் விநியோகம் வழமைபோன்று இவ்வருடமும் 350 குடும்பங்களுக்கு பங்கிடப்பட்டது. இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலை அன்மித்துள்ள வறிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோழி இறைச்சி என்பன வழங்கப்பட்டன.

கூட்டு ஸகாதுல் பித்ர் ஏற்பாட்டுக்காக தங்களது பித்ராக்களை வழங்கி ஒத்துழைக்குமாறு பிரசுரம் மூலமாக வேண்டுதல் விடுக்கப்பட்டதை ஏற்று சகோதர சகோதரிகள் பலர் கனிசமான தொகை அரிசினை வழங்கியிருந்தனர்.

அத்துடன் சஊதி அரேபியா யன்பு பிரதேசத்தில் பணிபுரியும் நிலையத்தின் உபதலைவர் சகோதரர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களினுடாக கிடைக்கப்பெற்ற பித்ரா நன்கொடைகளைச் சேர்த்து மேற்படி குடும்பங்களுக்கான பித்ரா விநியோகிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக கடந்த பல மாதங்களாக சஊதி யன்பு பிரதேசத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பல சகோதர சகோதரிகளும் தங்களது பித்ராவை சகோதரர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களினூடாக எமது ஸகாதுல் பித்ர் பங்கீட்டுக்காக அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தூய பணிக்காக பாடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

kattankudy mihlar

kattankudy (4)

kattankudy (3)

kattankudy (5)

kattankudy

Published by

Leave a comment