கொழும்பு: அண்மையில் தாக்கப்பட்ட கிரான்பாஸ் பள்ளிவாயல் பின்னணியில் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் செயற்படுவதாக ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்களும், இத்தாக்குதலை படம் பிடித்த இரகசியக் கமராவும், தாக்குதல் சம்பவங்களைத் தெளிவாக விபரிக்கும் நிலையில், அஸ்வர் இவ்வாறு கூறியிருப்பது, இவ்வருடத்துக்கான சிறந்த நகைச்சுவையாகக் கருதப்படுவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் விசுவாசத்தில் அதிகமான நம்பிக்கை வைத்திருப்பதால்தான், பார்ட்டிக்குச் சென்று அந்நிய பெண்களுடன் காபரி நடனம் ஆடுவதும், உண்டு மகிழ்வதும், அதன் நன்றிக்கு, உண்மைக்குப் புறம்பாக அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவதும் இதனால் அஸ்வர் ஹாஜியின் முகத்திரை கிழித்தெறியப்படுவதும் இன்றைய உலகில் பகிரங்கமாக இடம்பெற்றுவரும் ஓர் விடயம்.
ஓர் தந்தையைப் போல் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கரை செலுத்தவேண்டிய அஸ்வர், முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பை மறந்து, இதன் பின்னணியில் மொசாட் இருப்பதாகக் கூறுயிருப்பது, உண்மையில் சுயநினைவில்தான் அவ்வாறு கூறியிருக்கிறாரா? என வியக்க வைக்கின்றது.
கலகக் காரர்களைத் தடுத்து நிறுத்த வக்கில்லாமல் இருந்த பொலிஸாரை நோக்கி, அல்லது பாதுகாப்பு அமைச்சரை நோக்கி கேட்கவேண்டிய எத்தனையோ கேள்விகள் இருக்கும்போது, உணவுக்கும், ஆட்டத்துக்கும் மறந்து மொசாட்டைச் சாட்டுவது, மொட்டைத் தலைக்கு முடிச்சுப் போடுவது போல் இருக்கின்றது.
எனவே இனிமேலாவது அச்சமுடன் இருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்காக ஆரோக்கியமான நடவடிக்கைகளை உரிய தரப்பினருடன் பேசி, பௌத்த காடையர்களை இந்நடவடிக்கைகளில் இருந்து, தடைசெய்வதற்கு அரசாங்கத்தைக் கோருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Leave a comment