ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் கைநூல் வெளியீட்டு விழா

batticaloa (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் ஏற்பாடு செய்த ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான  கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் கைநூல் வெளியீட்டு விழா  இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு  ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிலேன் ‘லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி எட்வேக்டி நெட் எஸ்பி ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் ,எம்.எப்.எம்.சிப்லி,கிழக்கு மாகாண வீதி அபரிவிருத்தி அமைச்சின் செயலாளர் அன்ஸார்,கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளர் பொன்.செல்வநாயகம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் ,பிரதேச செயலாளர்கள் ,திணைக்களத் தலைவர்கள்,மாகாண முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள்,முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 இதன் போது ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான  கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் எனும்  கைநூலின் முதற்பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கு பிலேன் ‘லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி எட்வேக்டி நெட் எஸ்பியினால் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ்-முஸ்லிம்,சிங்கள பாலர்களின் பல்வேறு பட்ட கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

batticaloa (2)

batticaloa

nawas

batticaloa (4)

batticaloa (3)

Published by

Leave a comment