Category: Your Kattankudy
-
மலையகக் கட்சிகள் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து, வாகனங்கள் சேதம்
கொட்டகலை: இலங்கையில் மலையகத்தில் அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்கும் இடையே கொட்டகலை நகரில் மோதல் ஏற்பட்டுள்ளது.
-
ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் செயலகம் கிளிநொச்சியில் திறப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக போட்டியிடும் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் செயற்பாட்டுக்கான தேர்தல் செயலகம் நேற்று (17) திறந்துவைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாலரும் அமைச்சருமான சுசில்பிறேம ஜயந்த. சிறுவர் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸகரலியத்த,
-
சி.சந்திரகாந்தனின் பிறந்த தினத்தை முன்னிட்டு புலமைப்பரிசில் முன்னோடிக் கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்-கல்குடா கல்வி வலயத்தில் தரம் 5ம் புலமைப்பரீசில் பரிட்சைக்கு தேற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி பயிற்சி கருத்தரங்கு கடந்த 18.08.2013 ம் திகதி மட்-வாழைச்சேனை குகனேசன் மண்டபத்தில்
-
நாட்டின் முன்னேற்றத்துக்கு பொதுநலவாய மாநாடு பெரும் பங்களிப்பை வழங்கும்
பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார- கொழும்பு: கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு நாட்டின் சகல துறைகளுக்கும்- முக்கியமாக பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்கு வகிக்கும் என பொளருளாதார அபிவிருத்தி அமைச்சின் இயக்குநர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்தார்.
-
‘ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது’ – றிசாத் பதியுதீன்
– மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும், மதவாதத்தையும் பேசுவதாகவும், ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடக்கு மக்கள் வசந்தத்தை அனுபவிக்க வேண்டுமெனில் எமது அணியுடன் அணி திரவள்வதே தான் இன்றைய தேவையென்றும் கூறினார்.
-
கிழக்கு பட்டதாரி பயிலுனர்களுக்கு செப்டம்பர் முதல் நிரந்தர நியமனம்
பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அறிவிப்பு- மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றி வருபவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
-
‘இப்போதாவது இலங்கையைப் புரிந்து கொள்ளுங்கள்’- மு. கருணாநிதி
சென்னை: இலங்கையில் நடைபெறும் ”கொமன்வெல்த்” நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று நான் வெளியிட்ட அறிக்கையில் தேசக் கண்ணேட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்த வரலாற்று ரீதியான நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறேன்.
-
முகநூலை ‘ஹக்’ செய்த பலஸ்தீனியர்!
– OiT நியூயோர்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ‘ஹக்கர்’ ஒருவர் ‘ஹக்’ செய்துள்ளார்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே என்பவரே ஹக் செய்துள்ளார். அவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.
-
பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மரணம் : கண்கள், உடல் தானம்
– OiT: சென்னை: பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) சென்னையில் இன்று மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பெரியார்தாசன், சிகிச்சை பலனில்லாமல் மரணத்தைத் தழுவினார். கடந்த 2010ம் ஆண்டுதான் பெரியார்தாசன், இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார்.
-
மறைந்த பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ்
– K-Tic உலகறிந்தஅற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
-
எகிப்து கலவரமும் அரபிகளும் உலக மக்களும்..
-MJ எகிப்து கலவரம்: முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளை எகிப்து இடைக்கால அரசாங்கம் மேற்கொண்டுவந்த வேளையில், இடைக்கால அரசாங்கத்துக்கும், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையே குறிப்பாக கெய்ரோவில் உச்சக்கட்ட கலவரம், குறைந்தது கடந்த ஒருவாரமாக இடம்பெற்று வருகின்றது.
-
இன்று நள்ளிரவு முதல் தடை
கொழும்பு: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் டியூசன் வகுப்புக்கள் நடத்துவது இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.