ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் செயலகம் கிளிநொச்சியில் திறப்பு

kilinochi– பழுளுல்லாஹ் பர்ஹான்

வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக போட்டியிடும் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் செயற்பாட்டுக்கான தேர்தல் செயலகம் நேற்று (17) திறந்துவைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாலரும் அமைச்சருமான சுசில்பிறேம ஜயந்த. சிறுவர் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸகரலியத்த,  ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இணைந்து இச்செயலகத்தினை திறந்து வைத்தனர்.

 இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கட்சிகளும் பல வேட்பாளர்களும் போட்டியிடுகின்ற போதும் இரு கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிவுகின்றது அதில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியினராகிய நாம் இம்மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக மக்களோடு இணைந்து மிகக்கடுமையாக உழைத்திருக்கின்றோhம் அதனடிப்படையில் மாவட்டம் அனைத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை எட்டியுள்ளது. இருப்பினும் எமது மக்கள் இன்னமும் பலதேவைகளை எதிர் நோக்கியவர்களாகவே காணப்படுகின்றார்கள் அந்தவகையில் இத்தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியானது போட்டியாளர்களுக்கோ கட்சிக்கோ கிடைத் வெற்றியாக அமயப்போவதில்லை அதுமக்களுக்கான வெற்றியாகவே அமையும் அதுமக்களின் நலன்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்குமான வெற்றியாகவே அமையும் எனக் குறிப்பிட்டார்.

 இந்நிகழ்வில் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட முதன்மைவேட்பாளர் வை.தவநாதன், வேட்பாளர்களான அன்ரன் அன்பழகன், க.பிரகலாதன் ஆகியோரும் மற்றும் மகாதேவன் ஆகியோரும் பிரதேசசபை உறுப்பினர்களான கிருஸ்ணசாமி, இராமச்சந்திரன் ஆகியோரும் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

kilinochi

kilinochi (3)

kilinochi (2)

Published by

Leave a comment