கிழக்கு பட்டதாரி பயிலுனர்களுக்கு செப்டம்பர் முதல் நிரந்தர நியமனம்

muralitharan_200_150[1]பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அறிவிப்பு-

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றி வருபவர்களுக்கு  நிரந்தர நியமனங்கள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களின் திறன் அபிவிருத்திப் பயிற்சி நெறி இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளவர்களுக்கு செப்ரம்பர் முதலாம் திகதியும்- ஏனைய அமைச்சுக்களில் உள்ளீர்க்கப்பட்டவர்களுக்கு கட்டம்கட்டமாகவும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும்.

பல்வேறு பிரச்சிகைளுக்கு மத்தியில் இந்த பட்டதாரிகளின் நியமனங்கள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வழங்கப்பட்டன. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா நிறைவு செய்தவர்களுக்கு ஏனைய மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பட்டதாரி நியமனங்களின் போது அரசாங்க அதிபர் மிகவும் சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டிருந்தார். அதனாலேயே அனைத்து பட்டதாரிகளையூம் நியமனங்களுக்குள் உள்வாங்க முடிந்தது. அத்துடன் அவருடைய மாவட்டத்தின் அபிவிருத்தி சார் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். GA

Published by

Leave a comment