Category: Your Kattankudy
-
எகிப்து இராணுவ அடக்குமறைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எகிப்து இராணுவத்தினால் மேற்கொள்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.
-
நியூசிலாந்தில் அமுலுக்கு வந்த ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டம்: ஒரே நாளில் 50 திருமணங்கள்
– OiT: வெல்லிங்டன்: நியூசிலாந்தில், கடந்த ஏப்ரல் மாதம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளார்களின் திருமணச்சட்டம்இ நேற்று முதல் அமல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 50 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
-
பெனசீர் கொலை தொடர்பில் முஷாரஃப் மீது குற்றச்சாட்டு
கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இல் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஆஜரான அவர், தன் மீது சுமத்தப்பட்ட, சதி, கொலைக்கு உதவுதல், போதுமான பாதுகாப்பை வழங்காமை, தடய ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
-
ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த 4000 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு இன்று செய்வாய்க்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன்
-
கிழக்கில் முதற்தடவையாக 17 இலட்சம் ரூபா செலவில் ‘ஸ்கோர் போர்ட்’ புள்ளிப்பலகை அட்டை அறை மட்டக்களப்பில் திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக 17 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்கோர் போர்ட் புள்ளிப்பலகை அட்டை அறையொன்று திறந்து வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் நாளை புதன்கிழமை நடமாடும் சேவை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதிகளுக்கான ஆட்பதிவுத் திணைக்கள அடையாள அட்டை பெறுவதற்கான நடமாடும் சேவை நாளை புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸம்மில் தெரிவித்தார்.
-
காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் துரிதம் – பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதோடு நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
பன்றியின் தோல் கலப்படம் செய்யப்படும் பிஸ்கட்
– அஷ்செய்ஹ்: ஹிஸ்புல்லாஹ் (ரஷாதி) இன்று மேற்கத்தியர்களால் உண்ணக் கூடிய உணவிலும் பல சூழ்சிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிஸ்கட். இன்று அதிகமானவர்களினால் உம்ராவிலிருந்து வாங்கி வரப்படக்கூடியதே இது. அரபியில் இவ்வாறு البسكويت اللذي يحتوي على جلد الخنزير டைப் செய்து ‘யூடியூப்’ இல் தேடிக்கொள்ளலாம்.
-
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகமட் பதி கைதுசெய்யப்பட்டார்!
– MJ கெய்ரோ: எகிப்து முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மட் பதி சற்று முன்னர் எகிப்து விசேட படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நஸ்ர் எனும் நகரில் வசித்து வந்த இவர் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. முகம்மட் பதியின் மகன், அம்மார் பதி (38), ஆறு வாரங்களாக இடம்பெறும் இக்கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தார்.
-
இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கில கவர்ச்சிப்புயல்! அவரது மாற்றத்துக்கான அனுபவத்தை பகிர்கிறார்….
– முகமட் ஜலீஸ், இங்கிலாந்து லண்டன்: கார்ளி வட்ஸ் (Carley Watts) எனப்படும் இருபத்து நான்கு வயதுடைய ஆங்கில மொடலிங் கவரச்சி நாயகி, தனது விடுமுறையில் சென்று மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் போது ஹிஜாப் அணிந்த ஓர் முஸ்லிம் பெண்ணாக மாறி இருந்தார். இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் கார்ளி வட்ஸின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடுமாறியதுடன், இவரது இரசிகர்களும், இங்கிலாந்து மக்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
ஆரையம்பதி பிரதான வீதியில் மரநடுகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனின் 38 வது பிறந்த நாள் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரையம்பதி பிரதான வீதியினை அழகு படுத்தலுக்காக விதியின் நடுவில் மரம் நடப்பட்டது.
-
சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழா இனிதே நிறைவு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழா நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றுள்ளது.