நாட்டின் முன்னேற்றத்துக்கு பொதுநலவாய மாநாடு பெரும் பங்களிப்பை வழங்கும்

media-4[1]பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார-

கொழும்பு: கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு நாட்டின் சகல துறைகளுக்கும்- முக்கியமாக பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்கு வகிக்கும் என பொளருளாதார அபிவிருத்தி அமைச்சின் இயக்குநர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கருத்தரங்கு இன்று (19) ஊடக அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே  அவர் இவ்வாறு கூறினார். பேராசியரியர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் அமைதிச் சூழல் உருவாக்கப்பட்டதனால் இது கைகூடியுள்ளது.

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தயக்கமின்றி முதலிடக்கூடிய நல்ல வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் 1000 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பாரக்கப்படுகின்றது என்றார்.

தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சரித ஹேரத் உரையாற்றுகையில் :

24 வருட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையில் பிரமாண்டமான சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறுகின்றது.

இதன் காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் எமது நாடு அளப்பரிய நன்மைகளை அடைந்துகொள்ளும் என்று கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயம் பேராசிரியா் ஆரியரத்ன அதுகல மற்றும் உதவிப் பணிப்பளார் ஹில்மி மொஹமட் ஆகியோரும் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்தினர்.

media-4[1]

-GA

Published by

Leave a comment