மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்-கல்குடா கல்வி வலயத்தில் தரம் 5ம் புலமைப்பரீசில் பரிட்சைக்கு தேற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி பயிற்சி கருத்தரங்கு கடந்த 18.08.2013 ம் திகதி மட்-வாழைச்சேனை குகனேசன் மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடத்தப்பட்டது.
பிரபல புலமைப்பரிசில் ஆசான் ஜெயக்காந்தனின் மூலம் நடத்தப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கிற்கு பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் சிறி கிருஸ்ணராஜா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் யோகவேள், செயற்குழு உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





Leave a comment