Category: Your Kattankudy
-
இலத்திரனியல் விற்பனை நிலையத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஒருவர் கைது-பொருட்களும் மீட்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு திருகோணாமலை வீதியில் அமைந்துள்ள சொப் லொஜிக் எனும் இலத்திரனியல் விற்பனை நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு இரண்டு இலட்சத்து 58ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த 33வயது ரன்ஜித் குமார் என்பவரை சந்தேகத்தில் பேரில் கைது செய்துள்ளனர்.
-
காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல்) ஏற்பாட்டில் எதிர்வரும் 19.10.2013 சனிக்கிழமை மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று காத்தான்குடி 05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
-
செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் ‘அனர்த்த முன் ஆயத்தம்’ தொடர்பான இரு நாள் செயலமர்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் ‘முன்னேற்றப் பாதை’ வேலைத்திட்டத்தின் கீழ் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி பிரிவு மட்ட அனர்த்த பதிலிருப்பு குழு உறுப்பினர்களுக்கான ‘அனர்த்த முன் ஆயத்தம்’ தொடர்பான செயலமர்வு புதிய காத்தான்குடி பல்நோக்கு மண்டபத்தில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
-
பொதுநலவாய உச்சிமாநாடு; வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பின்னணியைப் பார்த்து அனுமதி
கொழும்பு: இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டு செய்திகளை எழுதுவதற்காக அடையாள அட்டைகளை கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்த பின்னரே அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
-
ரூபா 12 இலட்சம் பெறுமதியான சிகரட் கடத்தல் முறியடிப்பு சவூதியிலிருந்து வந்தவர் கட்டுநாயக்கவில் கைது
கொழும்பு: சவூதி அரேபியாவிலிருந்து சுமார் 12 இலட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் வகைகளை கடத்தி வந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினர் நேற்று கைது செய்தனர். நேற்றுக்காலை 11.00 மணியளவில் சவூதி அரேபியாவிலிருந்து வந்த எஸ்.கியூ. 782 ரக விமானத்தில் வந்திறங்கிய
-
படைத்தவனின் கட்டளைக்காக மாத்திரம் இன்று 20 இலட்சம் ஹாஜிகள் அரபாவில் தரிக்கின்றனர்!
– MJ மக்கா: கறுப்பு, வெள்ளை, அரபி, அஜ்னபி, நாடு, கோத்திரம் இதற்கு அப்பால், படைத்தவனை மாத்திரம் வணங்கிட அவனது பக்கமே திரும்பிட, தங்களது, சொத்து, செல்வங்கள், குடும்பங்களைத் துறந்து இலட்சக்கணக்கான அல்லாஹ்வின் அடிமைகள் இன்று அறபாவில் தரிக்கின்றனர்.
-
7 வருடங்கள் கண்பார்வையற்ற பெண்ணுக்கு மஸ்ஜிதுல் நபவியில் மீளவும் கிடைத்த கண்பார்வை!
– MJ மதீனா: சூடான் நாட்டிலிருந்து இம்முறை ஹஜ்ஜூக்குச் சென்றிருந்த பாத்திமா அல் மஹி எனும் 60 வயதுப் பெண்மணிக்கு கடந்த ஏழு வருடங்களாக கண்பார்வை அற்ற நிலையில் இருந்து வந்தார். எனினும் ஹஜ்ஜூக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் தனது மகனுடன் ஹஜ்ஜிற்கு இம்முறை சென்றிருந்தார்.
-
இங்கிலாந்து-ரெடிங் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் தொழுகையும் பகற்போசன ஒன்றுகூடல் நிகழ்வுகளும்
ரெடிங்: பார்க்சயர் கவுண்டியில் வசிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து வருடா வரும் ரெடிங் நகரில் இடம்பெரும் பெருநாள் தொழுகையும், பகற்போசன ஒன்று கூடலும் வழமை போன்று இம்முறையும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-10-2013 செவ்வாய்க்கிழமை தேவாலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற இருக்கின்றன.
-
சிரியாவில் 6 செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களும், செம்பிறைச் சங்க தொண்டர் ஒருவரும் ஆயுத முனையில் கடத்தப்பட்டனர்!
– MJ டமஸ்கஸ்: பொதுப்பணியாற்ற சிரியாவுக்குச் சென்றிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பயணித்த வாகனத் தொடரனியின் மீது ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு, அதில் பயணித்த 6 சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களை ஆயுத முனையில் கைது செய்து சென்றிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
-
பொறுப்புடன் பதில் அளிக்குமா காத்தான்குடி சம்மேளனம்?
M.S.M.பாயிஸ் – சவூதி அரேபியா காத்தான்குடி: ”சென்ற வருடம் சம்மேளன கூட்டு உல்ஹியாவுக்கு சேகரித்த பணத்தில் 7 இலட்சம் ரூபா அளவில் வங்கியில் இருப்பு வைத்து அதற்கான இலாபத்தையும் பெற்று வருகின்ற சம்மேளனத்தின் கூட்டு உல்ஹியா திட்டத்துக்கு இவ்வருடமும் எப்படி பங்களிப்பது? எப்படி இருப்பு வைப்பது?? இது ஆகுமா???’
-
யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கிய பரிதாபம்
செங்கலடி: மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தப்பி தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார். போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
ரயிலின் முன் பாய்ந்து தாயும் மகளும் பலி!
வெயாங்கொட: கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் தாயொருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெயாங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.