மக்கா: கறுப்பு, வெள்ளை, அரபி, அஜ்னபி, நாடு, கோத்திரம் இதற்கு அப்பால், படைத்தவனை மாத்திரம் வணங்கிட அவனது பக்கமே திரும்பிட, தங்களது, சொத்து, செல்வங்கள், குடும்பங்களைத் துறந்து இலட்சக்கணக்கான அல்லாஹ்வின் அடிமைகள் இன்று அறபாவில் தரிக்கின்றனர்.
சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சின் தகவல்களின்படி 20 இலட்சம் ஹாஜிகள் இன்று அரபாவில் தரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ழுஹர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரைக்குமான பகல் நேரத்தில் அரபாவில் ஹாஜிகள் தரிக்கின்றனர். ஹாஜிகளுக்கான, பாதுகாப்பு, மருத்துவம், அவசர சேவை, போக்குவரத்து மற்றும் இலவச உணவு வசதிகள் பல மில்லியன் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், போலியான ஊடுறுவல் மூலமாக ஹஜ் எல்லைக்குள் நுழைய முற்பட்ட ஆயிரம் பேர்கள் மக்கா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாள் இந்த அரபாவுடைய நாளாகும். இந்நாளில் ஹாஜிகளைத் தவிர ஏனையவர்களை நோன்பு பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றிருப்பதும் ஓர் விசேட அம்சமாகும்.
![go-makkah-hajj-oumra-1g785c-hajj_pilgrimsjpg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/go-makkah-hajj-oumra-1g785c-hajj_pilgrimsjpg1.jpg?w=150&h=100)

Leave a comment