கொழும்பு: சவூதி அரேபியாவிலிருந்து சுமார் 12 இலட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் வகைகளை கடத்தி வந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினர் நேற்று கைது செய்தனர். நேற்றுக்காலை 11.00 மணியளவில் சவூதி அரேபியாவிலிருந்து வந்த எஸ்.கியூ. 782 ரக விமானத்தில் வந்திறங்கிய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது 239 கார்ட்டூன் சிகரட்டுகள் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்க ப்பட்டது.
இதிலிருந்து 47,800 சிகரட்டுகளும் சுமார் 11,95,000 ரூபா பெறுமதியானவை என சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். உதவி சுங்க அத்தியட்சகர் எம்.ஏ.ஓ. பெர்னாண்டோ, சுங்க அத்தியட்சகர் இந்திரா உக்வத்த ஆகியோர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
– TK
![Cigarate[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/cigarate1.jpg?w=200&h=200)
Leave a comment