செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் ‘அனர்த்த முன் ஆயத்தம்’ தொடர்பான இரு நாள் செயலமர்வு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் ‘முன்னேற்றப் பாதை’ வேலைத்திட்டத்தின் கீழ் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி பிரிவு மட்ட அனர்த்த பதிலிருப்பு குழு உறுப்பினர்களுக்கான ‘அனர்த்த முன் ஆயத்தம்’ தொடர்பான செயலமர்வு  புதிய காத்தான்குடி பல்நோக்கு மண்டபத்தில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களாக செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் வளவாளராக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் டீ.வசந்தராஜா கலந்து  கொண்டு அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் எவ்வாறு முன்ஆயத்தமாக இருப்பது தொடர்பில் விரிவுரைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை தொண்டர் இணைப்பாளர் எஸ்.கணேஷ்,காத்தான்குடிக் கிளை தொண்டர் இணைப்பாளர் சலீம்,கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் 30அனர்த்த பதிலிருப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.

செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை ‘முன்னேற்றப் பாதை’ வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment