சிரியாவில் 6 செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களும், செம்பிறைச் சங்க தொண்டர் ஒருவரும் ஆயுத முனையில் கடத்தப்பட்டனர்!

syria– MJ

டமஸ்கஸ்: பொதுப்பணியாற்ற சிரியாவுக்குச் சென்றிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பயணித்த வாகனத் தொடரனியின் மீது ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு, அதில் பயணித்த 6 சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களை ஆயுத முனையில் கைது செய்து சென்றிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

இச்சம்பவத்தில் செம்பிறைச் சங்க தொண்டர் ஒருவரும் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக மேலும் ஐ.சி.ஆர்.சி. உறுதிப்படுத்தி இருக்கின்றது.

சர்மீன் மற்றும் சர்கீன் மாநிலங்களுக்கிடையில் இத்தாக்குதல் சம்பவமும், ஆட்கடத்தலும் இடம்பெற்றிருக்கிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் சிரியாவில் நிலைகொண்டு, அங்கு மனித நேய உதவிகளை பாரபட்சமின்றி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment