மட்டக்களப்பு: மட்டக்களப்பு திருகோணாமலை வீதியில் அமைந்துள்ள சொப் லொஜிக் எனும் இலத்திரனியல் விற்பனை நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு இரண்டு இலட்சத்து 58ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த 33வயது ரன்ஜித் குமார் என்பவரை சந்தேகத்தில் பேரில் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எம்.என்.றஹீம் தலைமையிலான சாஜன்ட் அஹமட், பிசி.மஜீட், பிசி.ரன்ஜன், பிசி.சமரதுங்க,பிசி.அபேரத்;ன, பிசி.பிரியங்கர அகியோர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு வவுனதீவு கொத்தியாவல பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் கைபற்றியுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து எல்.சி.டி டீவி3, டிஜிடெல் கெமரா6, கையடக்க தொலைபேசி,ஹோம் தேயட்டர் சேடப்,லப்டோப் 1 ஆகிய இலத்திரனியல் பொறுட்களையும் கடந்த இரண்டு கிழமைக்கு முன்னர் மட்டக்களப்பு பொது சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோயிலுக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டு கானாமல் போன ஸ்கூடி பப் மோட்டார் சைக்கிளையும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிமா அதிபர் பூஜித ஜெயசுந்தர,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் ,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வா, மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுறுத்த பண்மார ஹக்மன,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குனசேகர,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலிலேயே குறித்த குற்றச் செயல்கள் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment