இங்கிலாந்து-ரெடிங் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் தொழுகையும் பகற்போசன ஒன்றுகூடல் நிகழ்வுகளும்

eid

ரெடிங்: பார்க்சயர் கவுண்டியில் வசிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து வருடா வரும் ரெடிங் நகரில் இடம்பெரும் பெருநாள் தொழுகையும், பகற்போசன ஒன்று கூடலும் வழமை போன்று இம்முறையும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-10-2013 செவ்வாய்க்கிழமை தேவாலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற இருக்கின்றன.

நபிகளாரின் பெருநாள் சுன்னத்தை பின்பற்றும் உன்னதமான நோக்கில் திடலில் தொழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

எனினும் தற்பொழுது இடம்பெற்றுவரும் மோசமான காலநிலையைக் கருத்திறகொண்டும், திங்கட்கிழமை தொடர் மழை எதிர்பார்ப்பதைக் கருத்திற்கொண்டும், மேலும் செவ்வாய்கிழமை காலையில் (தொழுகை இடம்பெறும் நேரம்) வெப்பநிலை 8-9 இற்கு இடைப்பட்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், வெளித்திடலில் தொழுவதற்கான உகந்த காலநிலையல்ல என்பதைக் கருத்திற்கொண்டு, வழமையாக ஜூம்ஆ தொழுகை இடம்பெறும் தேவாலய மண்டபத்திற்கு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த மண்டபத்தை காலை 9 மணிக்கு மீளளிக்கும் ஒப்பந்தத்திற்கமைய, பெருநாள் தொழுகையில் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி,

தக்பீர்: காலை 07:40 மணி

தொழுகை: காலை 08:00 மணி

குத்பா: மௌலவி: இஸ்ஸத்

எனவே சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஈத் பகற்போசன விருந்து ஏற்பாடும் ஒன்றுகூடல் நிகழ்வும் பகல் ஒரு மணிக்கு இடம்பெறும்.

இந்நிகழ்வுகளில் அனைவரையும் உரிய நேரத்தில் தங்களது குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறும், பள்ளிவாயல் நிதிக்கு, தங்களது அன்பளிப்புக்களை வழங்குமாறும், இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான ‘அஸ்லம்-ரெடிங்’ நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

ஈத் முபாறக்

Published by

Leave a comment