மதீனா: சூடான் நாட்டிலிருந்து இம்முறை ஹஜ்ஜூக்குச் சென்றிருந்த பாத்திமா அல் மஹி எனும் 60 வயதுப் பெண்மணிக்கு கடந்த ஏழு வருடங்களாக கண்பார்வை அற்ற நிலையில் இருந்து வந்தார். எனினும் ஹஜ்ஜூக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் தனது மகனுடன் ஹஜ்ஜிற்கு இம்முறை சென்றிருந்தார்.
தனது கண்பார்வை தெரியாதால் கண் சத்திர சிகிச்சையும் அவர் கடந்த காலங்களில் செய்திருந்தார். எனினும் சத்திர சிகிச்சை பலனளிக்கவில்லை.
ஓர் பார்வையற்ற பெண்மணியாக புனித ஹஜ்ஜூக்குக் காலடி எடுத்துவைத்த இப்பெண்மணி, மஸ்ஜிதுன் நபவிக்கு தொழுவதற்காகச் சென்றார்.
பள்ளிக்குச் சென்று தொழுகையை முடித்துவிட்டு, படைத்தவனிடம் பிரார்த்தித்தார்.
‘யா அல்லாஹ் எனது பார்வையை மீளக் கொடு’!
அவர்கேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் தாமதிக்காமல் அப்பெண்மணிக்கு அங்கீகரித்தான்.
‘தனது கண்ணால் மஸ்ஜிதுன் நபவியை தான் காண்கிறேன்! எனது துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்’ என மகிழ்சியில் கண்ணீருடன் கூறினார் பாத்திமா அல் மஹி.
‘எனது மகனை நான் காண்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் புகழுக்குரியவன். அவன் பெரியவன்’.
என்பதாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார் இப்பெண்மணி.
‘எனது உம்மா என்னை 7 வருடங்களுக்குப் பின்னர் என்னைப் பார்க்கிறார். அல்ஹம்துலில்லாஹ்’ என ஆனந்தக் கண்ணீருடன் தனது தாயை அணைத்துக் கொள்கிறார் அவரது அன்பு மகன்.
![proximity_big[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/proximity_big1.jpg?w=150&h=112)
![proximity_big[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/proximity_big1.jpg?w=500&h=375)
Leave a comment